தமிழில் தற்போது இந்திய அளவு பேசப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் தொடங்கி முந்தைய படமான விக்ரம் திரைப்படம் வரை வித்யாசமான கதைக்களத்தை கையாண்டு நேர்த்தியான படைப்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் கடந்த 2018ல் வெளியான திரைப்படம் கைதி. அட்டகாசமான திரைக்கதையில் புதுவிதமான உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்து மிரட்டியிருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரது முந்தைய படமான உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தின் கதைக் கருவை இணைத்தும் 1986 கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் கதைக்கருவை இணைத்தும் தனி ஒரு திரையுலகை உருவாக்கினார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா புது கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அசத்தியிருப்பார். அதன்படி உருவான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த திரையுலகம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்து போக இதனை ரசிகர்கள் ‘Lokesh kanagaraj cinematic universe’ – LCU என்றழைத்தனர். இதுவே தற்போது இந்திய சினிமாவின் டிரெண்ட்டாகவும் இருந்து வருகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களை வைத்து ‘லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் தளபதி விஜய், திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஷ்மீர் பகுதி படப்பிடிப்பை முடித்த லியோ படக்குழு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். முன்னதாக படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமல்லாமல் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் ‘LCU’ பிரிவின் கீழ் வருமா என்று பலர் யூகித்து வருகின்றனர். அதன்படியே பல தகவல்கள ரசிகர்களிடம் இருந்து தினம் தினம் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது ஏற்கனவே LCU பிரிவின் படி படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், கார்த்தி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் படத்தில் இருக்க தற்போது தமிழ் சினிமாவின் மேலும் ஒரு உச்ச நடிகரான விஜய் இதில் இணைவார் என்ற ரசிகர்களின் யூகங்கள் படத்தின் மார்கெட்டை நாளுக்கு நாள் கூட்டி வருகின்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு கலை இயக்கம் செய்து தற்போது உருவாகி வரும் லியோ படத்திற்கு கலை இயக்குனரான பணியாற்றி வரும் கலை இயக்குனர் சதீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Eagle is coming’ என்று பதிவிட்டு விக்ரம் படத்தில் இடம் பெற்ற கழுகு சிலை படத்தை பதிவிட்டுள்ளார்.
— Satheeskumar Artdirector (@ArtSathees) April 12, 2023
இந்த லோகேஷ் கனகராஜ் LCU பிரிவில் ரசிகர்களை கூற்றின் படி கழுகு என்றால் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்த கமல் ஹாசன் என்று பொருள், மேலும் தேள் என்றால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா, லியோ என்றால் சிங்கம் தற்போது உருவாகி வரும் தளபதியின் லியோ திரைப்படம் என்று ஒரு கூற்று ரசிகர்களிடம் இருந்து வருகிறது
அதன்படி லியோ பட கலை இயக்குனர் கழுகு சிலை புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து அதனுடன் விக்ரம் படத்தில் அடிக்கடி வரும் ‘Code Red’ எமொஜியையும் பதிவிட்டுள்ளார் இதனை பகிர்ந்து ரசிகர்கள் லியோ திரைப்படத்தில் கமல் ஹாசன் வருவார் அல்லது விக்ரம் பட தொடர்பான சில காட்சிகள் இருக்க கூடும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக லியோ படத்தின் வசன கர்த்தாவும் பிரபல இயக்குனரான ரத்னா அவர்கள் கழுகு இருக்கும் ஓவிய புகைப்படத்தை பகிர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லியோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் LCU பிரிவில் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது