சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு பிரபலம் !
By Aravind Selvam | Galatta | August 24, 2022 12:21 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக இவர் நடித்த டான் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,ப்ரின்ஸ்,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21,மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது,இதனை அடுத்து அயலான் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவீரன் படத்தினை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றனர்.மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இந்த படத்தினை இயக்குகிறார்.பரத் ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த படத்தில் நடிகை சரிதா,இயக்குனர் மிஷ்கின்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமான TSK எனப்படும் திருச்சி சரவணக்குமார் நடிக்கிறார் என்பதை சிவகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன் நடந்த விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் உறுதிசெய்தார்,இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.