ஆத்மீகாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த கோடியில் ஒருவன் படக்குழு !
By Aravind Selvam | Galatta | February 09, 2021 20:41 PM IST
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது..இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஆத்மீகா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருவார்.
தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்வது,ஒர்க்கவுட் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார் ஆத்மீகா.இவர் விஜய் ஆன்டனி ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்தது.
இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.ஆத்மீகா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்,இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கோடியில் ஒருவன் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி இவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Overwhelmed by birthday surprise from #KodiyilOruvan team and surprise message from fans 🤗❤️ pic.twitter.com/POi3JYk90n
— Aathmika (@im_aathmika) February 9, 2021
Chithi 2 going to be stopped? Actress Radikaa's important clarification!
09/02/2021 06:27 PM
Title and first look poster of Gautham Menon's next film RELEASED - check out!
09/02/2021 04:21 PM
R.I.P.: Actor Rajiv Kapoor passes away due to cardiac arrest!
09/02/2021 03:46 PM