சர்ச்சைக்குள்ளான 'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.. இது தான் கதையா? - வைரலாகும் அறிவிப்பு உள்ளே..

கேரளா ஸ்டோரி இயக்குனரின் அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பு வைரல் - Kerala story Director Next Project announcement | Galatta

கடந்த மே 5ம் தேதி இந்தியில் உருவாகி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சர்ச்சையை நாடு முழுவதும் ஏற்படுத்திய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அடா ஷர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அதனுடன் சித்தி இதாணி, யோகிதா, சோனியா பலானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்து மத பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை ஏமாற்றி தீவிரவாதத்திற்கு கொண்டு சேர்ப்பதை கதைக்களமாக கொண்டு உருவான கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்  உட்பட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக் கிளம்பியும் . தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்ததாக சொல்லப் படுகிறது.

கடுமையான விமர்சனத்தை சந்தித்து அவ்வப்போது பல எதிர்ப்புகளை தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் இயக்குனர் சந்தித்து வருகிறார், இந்நிலையில் தனது அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் அடுத்த திரைப்படத்தை தொடங்கவிருக்கும் சுதிப்டோ சென்னுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அதன்படி அவரது அடுத்த படத்துக்கு ‘பாஸ்டர்’ என்று தலைப்பிடுள்ளது. மேலும் அதன் முதல் பார்வையில் “மறைக்கப்பட்ட உண்மைகளை தேசத்தை புரட்டி போடும்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தி கேரளா ஸ்டோரி போஸ்டர்களில் “உண்மை சம்பவம்” என்று குறிப்பிட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.  தி கேரளா ஸ்டோரி பட தயாரிப்பாளர் விபுல்ஷா மீண்டும் இந்த படத்தை தயாரிப்பதன்  மூலம் சுதிப்டோ சென் உடன் கூட்டணிமைக்கின்றார்.

முன்னதாக இப்படம் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட்டுகள் சார்ந்த கதையாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்திருந்தார். அதன்படி முதல்பார்வையில் காடும் துப்பாக்கியும் கம்யூனிஸ்ட் கொடியும் காணப்படுகின்றது.

allahabad high court notice to prabhas adipurush film crew check details here

மேலும் முதல் பார்வையை இயக்குனர் சுதிப்டோ சென் பகிர்ந்து அதனுடன் “கடந்த ஏப்ரல் 6, 2010 ல் சட்டீஸ்கர் மாநிலத்தில் தன்டிவாடா என்ற பஸ்தார் பகுதியில் 76 இந்திய ராணுவ வீரர்கள் 8 அப்பாவி கிராம மக்கள் கொடூரமாக தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பலியானார்கள். 14 வருடம் கழித்து கவித்துவமான நீதி வழங்கப்படவுள்ளது. #பஸ்தார்  . தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பின் எங்கள் படைப்பு வரும் ஏப்ரல் 4, 2024 ல் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

April 6, 2010.
76 CRPF jawan and 8 poor villagers were killed in an bloodiest attack by the terrorists, in Chintalner village of Dantewada District of Bastar, Chhattisgarh. After exactly 14-years, the poetic justice will be delivered.#Bastar ... Our humble presentation after… pic.twitter.com/qXZlOJsprp

— Sudipto SEN (@sudiptoSENtlm) June 26, 2023

 

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

பிச்சைக்காரன் 2 ஹிட்..! அடுத்த முக்கிய படத்தை வெளியிட முன் வந்த விஜய் ஆண்டனி.. – உற்சாகத்தில் ரசிகர்கள்..

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

மாரியம்மா முதல் ரெனே வரை.. நடிகை துஷாரா விஜயன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!
சினிமா

இங்கிலாந்தில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு கவுரவம்.. – குவியும் வாழ்த்துகள்..!