கே ஜி எஃப் தயாரிப்பாளர் உடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ்... அடுத்த பிரம்மாண்ட பட அசத்தலான அறிவிப்பு இதோ!
By Anand S | Galatta | December 05, 2022 15:20 PM IST
இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டில் தெலுங்கில் குட் லக் சகி & சர்க்காரு வாரி பாட்டா தமிழில் சாணிக் காயிதம் மற்றும் மலையாளத்தில் வாஷி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் சைரன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்காக தயாராகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் மற்றும் நடிகர் நானியின் தசரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக கேஜிஎஃப் & காந்தாரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ரகு தாத்தா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் M.S.பாஸ்கர் நடிக்கிறார். ஜான் ரோல்டன் இசையமைக்கும் ரகு தாத்தா படத்திற்கு யாமினி என்ன மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, T.S.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.
இயக்குனர் K.பாக்கியராஜ் அவர்களின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான “இன்று போய் நாளை வா” படத்தில் இடம் பெற்ற “ஏக் கௌமே ஏக் கிசான் ரகு தாத்தா” எனும் ஃபேமஸ் வசனத்தை கொண்டு தயாராகும் திரைப்படத்தை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் ரகு தாத்தா படத்தின் முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
Yek gaav mein yek kisan
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 4, 2022
Raghuthathaaaa!
Antha #Raghuthatha 😁
Super happy to be associated for my next adventure with @hombalefilms @sumank @yaminiyag @vjsub @RSeanRoldan #MSBhaskar sir #EditorSuresh @ShruthiManjari and #TeamRaghuthatha pic.twitter.com/aMtixzFB5S