கீர்த்தி பாண்டியனின் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
By Anand S | Galatta | May 04, 2022 21:21 PM IST
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற ஹெலன் படத்தின் ரீமேக்காக வெளிவந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் அவரது தந்தை அருண்பாண்டியன் உடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இயக்குனர் ஷாலினி இயக்கத்தில் தயாராகி வரும் கண்ணகி திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் அடுத்ததாக ரொமாண்டிக் காதல் திரைப்படமாக கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, தயாராகி வரும் திரைப்படம் கொஞ்சம் பேசினால் என்ன. சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முதல் நீ முடிவும் நீ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் கொஞ்சம் பேசினால் என்ன படத்தை இயக்குனர் கிரி மர்ஃபி எழுதி இயக்கியுள்ளார்.
லெனின்.A மற்றும் A.R.செல்வம் ஒளிப்பதிவில், தனசேகர் படத்தொகுப்பு செய்யும் கொஞ்சம் பேசினால் என்ன படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். இந்நிலையில் கொஞ்சம் பேசினால் என்ன படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
First Look Poster of #KonjamPesinaalYenna#கொஞ்சம்பேசினால்என்ன @supertalkies @sameerbr @vinoth_kishan @GiriMurphy@leninlens27 @arselvamdft @Deepan_Composer @vignesh_avk @YD_eshwar @ajithvedi555@LahariMusic @konjampesinaal1 @onlynikil #KPY pic.twitter.com/MlF1FJqaWt
— Keerthi Pandian (@iKeerthiPandian) May 4, 2022
WOW: Ramya Pandian makes her debut in Malayalam cinema - with this big film!
06/12/2021 02:51 PM
Pandian Stores fame actor Venkat quits Sun TV's Roja serial - fans disappointed!
24/09/2021 02:40 PM