இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் சென்சார் குறித்த தகவலும் வெளியானது. ஏற்கனவே தீபாவளி வெளியீடாக ஜப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற நவம்பர் 10ஆம் தேதி உலகம் எங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என தற்போது ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே தினத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் & SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLEX மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரிலீசுக்கு ரெடியாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் சென்சாரும் நிறைவடைந்து இருக்கிறது. நடிகர் கார்த்தியின் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வெளிவர இருக்கும் ஜப்பான் படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தனக்கென தனி பாணியில் படத்திற்கு படம் தரமான கதை களங்களையும் நல்ல நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தியின் படங்களுக்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் உண்டு அந்த வகையில் தனது 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் படம் தான் ஜப்பான். குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் முதல்முறையாக கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜப்பான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வரிசையாக அட்டகாசமான படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். தலைவர் 171 படத்திற்கு பிறகு அது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் தனது 26 ஆவது திரைப்படமாக உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது 27 வது படமாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் எழுதி இயக்கும் கார்த்தி 27 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் #கார்த்தி27 படத்தில் 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே தற்போது ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் சென்சார் குறித்தும் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ…
#Japan is yours from Nov 10th.#UAforJAPAN #JapanDiwali @Karthi_Offl @ItsAnuEmmanuel @vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu @philoedit #Banglan @YugabhaarathiYB @Arunrajakamaraj @PraveenRaja_Off @Dir_Rajumurugan… pic.twitter.com/DAZWu7WzSr
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 2, 2023