இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது வெளியிட்டு இருக்கிறார். முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து முக்கியமான கௌரவ வேடத்தில் தனது முதல் தமிழ் படமாக கபில்தேவ் அவர்கள் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்ற வரும் நிலையில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்தார். இதனை அடுத்து தற்போது கபில்தேவ் அவர்களும் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்திருப்பதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது X பக்கத்தில், "இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் #லால்சலாம் டப்பிங் பேசி முடித்தார்..என்ன ஒரு அனுபவம்! உண்மையான வசீகரன் நீங்கள் தான் "CAP"🫡❤️ முழு வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன்! #PONGAL2024" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் அந்த பதிவு இதோ…
THE LEGEND of Indian cricket wraps up dubbing for #lalsalaam ..what an experience it’s been! True charmer you are “CAP”🫡❤️
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 23, 2023
Post production in full throttle! #pongal2024 🙏🏼 pic.twitter.com/sgfSJ5YOfD
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்த படமாக இந்த லால் சலாம் திரைப்படம் உருவாகி இருக்கிறது. தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முதல்முறையாக மொய்தின் பாய் எனும் சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் மேலும் செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா சனிக்குமார், விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த லால் சலாம் திரைப்படத்தில் கபில் தேவ் அவர்கள் முக்கியமான ஒரு சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட்டை மையப்படுத்திய அதிரடியான பொலிடிகல் திரில்லர் படமான லால் சலாம் திரைப்படத்தின் டீசர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியானது. ரசிகர்களுக்கு தீபாவளியில் ஸ்பெஷல் விருந்தாக வெளிவந்த லால் சலாம் படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே 2024 பொங்கல் வெளியீடாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏலியன் சயின்ஸ்ஃபிக்ஷன் படமான அயலான் திரைப்படமும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்க ஹிந்தியில் தயாராகி இருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.