மக்களிசையை வெகுஜன ஊடகத்தில் கொண்டு சேர்த்து அனைத்து தரப்பு மக்களையும் தன் இசையினால் கவர்ந்து இழுத்து பல தசப்பதங்களாக ஆளும் இசையுலக சக்ரவர்த்தியாக வலம் வரும் இளையராஜா இன்று அவரது 80 வது பிறந்தநாளை ரசிகர்கள் பல விதமாக கொண்டாடி வருகின்றனர். பல தலைமுறைகளை தன் இசையினால் வசப்படுத்தி இன்று வரை அவர்களை புது புது இசையின் மூலம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் இளையராஜா. அவரது பிறந்தாளையொட்டி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டு புகழ்ந்து தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். தற்போது இவரது வாழ்த்து ரசிகர்கள் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உலகநாயகன் கமல் ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் மூலைமுடுக்கில் இருக்கும் மக்களுக்கும் பரவாலக தெரிவதற்கும் இளையராஜா ஒரு காரணம் என்றே சொல்லலாம். இளையராஜா திரையுலகில் வருவதற்கு முன்பே கமல் ஹாசன் திரையுலகில் வந்து இளம் நடிகராக பல மொழிகளில் பல படங்களில் நடித்து சாதனை படைத்து வந்தார். அவருக்கு ஏற்ற ஒரு கச்சித்தமான கூட்டணியாக இளையராஜா அமைந்தார். அதன்படி தொடர்ந்து பல படங்களுக்கு ஒன்றாக பயணித்தனர். கமர்ஷியல் திரைப்படமாக இருந்தாலும் எதார்த்த திரைப்படங்களாக இருந்தாலும் கமல் ஹாசன் திரைப்படங்களில் இளையராஜாவின் இசை தனித்து தெரியும். ஒவ்வொரு முறையும் இளையராஜா கமல் ஹாசன் கூட்டணி ஒரு மேஜிக் செய்து ரசிகர்களை கட்டி இழுக்கும் பல தசாபதங்களாக இணைந்து பயணிக்கும் இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் தனி விரும்பத்தக்க கூட்டணியாக இருந்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது. சட்டம் என் கையில். சிகப்பு ரோஜாக்கள், குரு, ராஜ பார்வை, சத்யா, மூன்றாம் பிறை. சகலகலா வல்லவன், விக்ரம், நாயகன் விருமாண்டி, ஹே ராம் போன்ற பல படங்கள் பட்டியலிட்டு கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2023