தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் வெற்றிமாறன்.தனது வித்தியாசமான படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.அடுத்ததாக விடுதலை,வாடிவாசல் படங்கள் வெளியாகவுள்ள.வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.இந்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

வெற்றிமாறன் நாம் அறக்கட்டளை மூலம் திரை-பண்பாடு ஆய்வகத்தை தொடங்கியுள்ளார்.இதன் மூலம் திரைத்துறையில் நுழைய விரும்பும் ஏழை மாணவர்களை வழிநடத்த முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து  அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில்  பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைப்புலி தாணு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வெற்றிமாறனின் அறக்கட்டளைக்கு வழங்கி , வெற்றிமாறன் தேர்ந்தெடுக்கும் ஒரு மாணவருக்கு தனது தயாரிப்பில் இயக்குனர் வாய்ப்பளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S  தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்  மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது  V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் . ”நாம் அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர்  ஃபாதர் ராஜாநாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .

தமிழில் முன்னணி தயாரிப்பில் ஒருவரான தாணு பல இளம் கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை நட்சத்திரங்களாக மாற்றியுள்ளார்.தனது வியாபார யுக்தியின் மூலம் பல சின்ன படங்களையும் மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.அப்படிப்பட்ட இயக்குனர் வெற்றிமாறன் எடுக்கும் முயற்சியில் தனது பங்களிப்பும் இருக்க வேண்டும் செய்யும் இந்த செயல் பல இளம் திறமையான இயக்குனர்களை  எதிர்பார்க்கப்படுகிறது.

kalaipuli dhanu one crore donation to director vetrimaaran iifc foundation