தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும் திகழும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விடுதலை பாகம் 1. நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த விடுதலை திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் விடுதலை படத்தின் பாகம் 1 திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 31ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டிகள் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்துள்ள வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கியது குறித்து அவரிடம் கேட்டபோது,
"அவர் எனக்கு தெரிந்த ஒரு நபர்.. தெரிந்த ஒரு மனிதர்.. அவரையும் கேரளாவில் எனக்கு தெரிந்த ஒரு மனிதரையும் இணைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் வாத்தியார். அவருடைய கேரக்டர் இன்னொருவருடைய வாழ்க்கை இதை இணைத்து அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இரண்டு விஷயங்கள்... ஒன்று ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்த, உண்மையிலேயே இங்கு புரட்சி வரவேண்டும் என நம்பி அதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த பழைய தலைமுறை நக்சலைட்டுகள்... இன்று புத்தகங்களை வாசித்து விட்டு வெறும் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் அல்ல… வாய் சண்டை வீரர்கள் அல்ல... உண்மையிலேயே அவர்கள் நம்பினார்கள் அவர்களுக்குள் ஒரு அப்பாவித்தனம் இருந்தது. அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள் மக்கள் அவர்களை வேறு ஆட்களாக நினைக்கவில்லை... அவர்களுடைய கதை தான்... மிக வலுவான கதாபாத்திரம் கேமியோ அல்ல... இன்னும் சொல்லப்போனால் அவர்தான் கதாநாயகன் இன்னொரு கோணத்தில்... இரண்டு பேர் என்றால் இருவருமே இணையான கதாநாயகர்கள் மேலும் விஜய் சேதுபதி எப்போதுமே கதாபாத்திரங்களை பார்த்து தான் நடிக்கிறார் சிறு சிறு வேடங்களில் கூட நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு நடிகர் ஒரு படத்தை தேர்ந்தெடுப்பதில் இயக்குனர் முக்கிய பங்கு வகுக்கிறார். இந்த வேடத்தை வெற்றிமாறன் இல்லாமல் வேறு ஒருவர் கொண்டு போயிருந்தால் ஒருவேளை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அது வந்து வெற்றிமாறன் அழைத்தார் அவர் நடிக்கிறார். ஒருவேளை வெற்றிமாறன் அவர்கள் அழைத்தால் இன்னும் சூப்பர் ஸ்டார்கள் கூட நடிக்கக்கூடும் இயக்குனர் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது அல்லவா அதுதான்…" என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ஜெயமோகன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…