மணிரத்னம் சாருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப கஷ்டம்!- பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி இதோ!

இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி,Ilango krishnan about mani ratnam in ponniyin selvan movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பாகம் 2 திரைப்படமும் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார். முதல்முறையாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் இணைந்து பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் படத்திற்காக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் ஆசிரியர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஒரு பெரிய ஜாம்பவான் அவருக்கு நீங்கள் பாடல்கள் எழுதும் போது அவர் என்ன மாதிரியான INPUTS-களை கொடுப்பார்? எனக் கேட்ட போது, 

"உண்மையில் அவருடைய VISION தான் இந்த மொத்த படைப்புமே... இந்த படத்தில் எதுவுமே அவர் இல்லாமல் நகரவே நகராது. பாடல்களைப் பொறுத்த வரைக்கும் மணி சாரிடம் பாட்டு எழுதுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்... திரும்பத் திரும்ப நிறைய OPTIONS கேட்டுக் கொண்டே இருப்பார். NO மட்டும் சொல்லவே மாட்டார். இது நன்றாக இல்லை என முகத்தில் அடித்த மாதிரி சொல்ல மாட்டார். ஆனால் ரொம்ப நாசூக்காக சொல்வார். இது நன்றாக இருக்கிறது இதை வைத்துக் கொள்வோம், இதே மாதிரி வேறு ஒன்று முயற்சி செய்வோமா என்று கேட்பார். இப்போது ஏதாவது ஒரு டியூனுக்கு நாம் ஒரு வரி சொல்லுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள் இது கவிதையாக நன்றாக இருக்கிறது சொற்றொடராக இன்னும் கொஞ்சம் மாற்றங்களேன் என்பார். அதேபோல் சொற்றொடரை மாற்றி கொடுத்தால் சொற்றொடர் நன்றாக இருக்கிறது கவிதையும் அதில் வந்து விட்டது ஆனால் அந்த சத்தங்கள் தான் ஒரு பாடலுக்கான சத்தங்கள் மாதிரி தெரியவில்லை எனக் கேட்பார். அதையும் நாம் மாற்றி கொடுத்தோம் என்றால் கவிதை நன்றாக இருக்கிறது சொற்றொடர் நன்றாக இருக்கிறது சத்தங்களும் நன்றாக இருக்கிறது கொஞ்சம் பழந்தமிழ் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது கொஞ்சம் பழந்தமிழில் கொண்டு வாருங்கள் என்று கேட்பார். பின்னர் பழந்தமிழில் கொண்டு வருவேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் அந்த வேலையை வாங்குவார்."

என பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் அந்த முழு பேட்டி இதோ…
 

“ஏன் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸாக எடுக்கவில்லை?” கேள்விக்கு அட்டகாசமான பதிலை கொடுத்த மணிரத்தினம் – விவரம் உள்ளே..
சினிமா

“ஏன் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸாக எடுக்கவில்லை?” கேள்விக்கு அட்டகாசமான பதிலை கொடுத்த மணிரத்தினம் – விவரம் உள்ளே..

‘சொப்பன சுந்தரி’ படத்தையடுத்து வித்யாசமான கதைக்களத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் வைரலாகும் ‘ஃபர்ஹானா’ படத்த
சினிமா

‘சொப்பன சுந்தரி’ படத்தையடுத்து வித்யாசமான கதைக்களத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் வைரலாகும் ‘ஃபர்ஹானா’ படத்த

ஆதித்ய கரிகாலனின் காதல் கதையை பேசும் ‘சின்னஞ்சிறு நிலவே'.. அட்டகாசமான பாடல் வெளியானது – உற்சாகத்தில் PS2 ரசிகர்கள்..
சினிமா

ஆதித்ய கரிகாலனின் காதல் கதையை பேசும் ‘சின்னஞ்சிறு நிலவே'.. அட்டகாசமான பாடல் வெளியானது – உற்சாகத்தில் PS2 ரசிகர்கள்..