இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட்டான சினிமா பிரபலம் என்றால் அது ஹிப்ஹாப் தமிழா ஆதி தான். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு 2K கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யமே உள்ளது. அந்த வகையில் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி பப்பர மிட்டா என புது ட்ரீட் கொடுக்க உள்ளார். முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அன்பறிவு திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக Disney+ Hotstar தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது தனது அடுத்த புதிய திரைப்படமாக உருவாகும் PT Sir திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். முன்னதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் வீரன்.
மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தை போல ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகும் இந்த வீரன் திரைப்படத்திற்கு தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வீரன் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த தண்டர் காரன் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. வீரன் திரைப்படத்தின் 2வது பாடலாக ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் பப்பர மிட்டா பாடல் வரும் மே 13ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
The second single from #Veeran , A breezy song #PaparaMitta is releasing on May 13 , 5PM 🥁
— Sathya Jyothi Films (@SathyaJyothi) May 11, 2023
Grand Worldwide Release on
JUNE 02nd 💥 @hiphoptamizha @ArkSaravan_Dir @VinayRai1809 @kaaliactor @editor_prasanna @deepakdmenon @saregamasouth @SakthiFilmFctry pic.twitter.com/JzykTS92Jx