தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண் பொறியாளன், வில் அம்பு திரைப்படங்களுக்கு பிறகு மிகுந்த பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணபெண்ணே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

முன்னதாக "பூ" பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறுகோடி வானவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து ஸ்டார் மற்றும் டீசல் ஆகிய திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே நடிகர் ஹரீஷ் கல்யாண் தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் வாழ்க்கை துணையை அறிமுகம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில்,
அன்புள்ள அனைவருக்கும்,
என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த நிபந்தனைகளும்
அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள், அதே போலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். 
அன்புடன், 
ஹரிஷ் கல்யாண்

என தெரிவித்துள்ளார்.தனது வாழ்க்கை துணையாக திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நர்மதா உதயகுமார் உடன் நடிகர் ஹரீஷ் கல்யாண் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அவரது அந்த அறிக்கை இதோ…
 

With all my heart, for all my life ❤️

Im extremely happy to introduce 𝐍𝐚𝐫𝐦𝐚𝐝𝐚 𝐔𝐝𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, my wife-to-be. Love you to bits 🤗❤️

With God’s blessings, as we begin our forever, we seek double the love from you all, now & always pic.twitter.com/yNeHusULfY

— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022