ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த ருசிகர தகவல் !
By Aravind Selvam | Galatta | January 22, 2021 20:07 PM IST
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வெளியான 100% காதல் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து 4g,ஜெயில்,காதலிக்க யாருமில்லை,காதலை தேடி நித்யானந்தா,பேச்சுலர்,
இவர் அடுத்ததாக நடித்து வரும் பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடல் காதல் கண்மணி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.SMS,பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார்.
பிகில் படத்தின் மூலம் பிரபலமான அம்ரிதா ஐயர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தை சன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்றும் இந்த படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பான நாங்க ரொம்ப பிஸி மற்றும் புலிக்குத்தி பாண்டி படங்களின் வரவேற்பை தொடர்ந்து .இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Veteran Bhajan singer Narendra Chanchal passes away at 80, Condolences pour in
22/01/2021 09:55 PM
GV Prakash's next film's director and heroine revealed - exciting deets here!
22/01/2021 08:08 PM