தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் கஜினி. இந்தத் திரைப்படத்தின் வெற்றி ஏஆர்.முருகதாஸ்-ஐ ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனராக மாற்றியது. இத்திரைப்படத்தை ஹிந்தியில் அமீர்கான் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ஹிந்தியிலும் மெகா ஹிட்டானது. தமிழில் வெளியான கஜினி திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

gajini movie producer mr salem chandhrasekaran passes away due to covid 19

ஸ்ரீ சரவணா கிரியேஷன்ஸ் திரு.சேலம் சந்திரசேகரன் இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார். திரு.சேலம் சந்திரசேகரன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பிப்ரவரி 14 ,கஜினி, சபரி, கில்லாடி என பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரு.சேலம் சந்திரசேகரன் தீவிர சிகிச்சையில் இருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.  

 

திரு.சேலம் சந்திரசேகரனின் மறைவுக்கு பல பிரபலங்களும் தனது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் கஜினி திரைப்படத்தின் இசையமைப்பாளரும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் திரு.சேலம் சந்திரசேகரன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்துள்ளார்

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும் அதில் சிலர் மரணிப்பதும் நம்மால் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு சிறந்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி.ஆனந்த்  நகைச்சுவை நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள். இப்போது  திரு. சேலம் சந்திரசேகரன் அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.