தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணியில் வலம் வந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன். தனது முதல் படமான போடா போடி படம் மூலம் தனித்துவமான திரைக்கதையின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பின் பக்காவான டார்க் காமெடி திரைப்படமான ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் கவனம் பெற்று பிரபலமடைந்தார். இன்றும் நானும் ரௌடி தான் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசமான கதையை கையாண்டு தனி தனி புத்துணர்வை கொடுக்க கூடியவராய் தமிழ் சினிமாவில் வலம் வந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதன்படி தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான இரட்டை ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் விக்னேஷ் சிவன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே மக்களின் பேராதரவை பெற்ற நவீன ஊடகமாக விளங்கும் நமது கலாட்டா தமிழ் மீடியாவின் அடுத்த கட்ட நகர்வாகவும் அடுத்த வாழ்வியல் முயற்சியாகவும் தொடங்கப்பட்ட ‘கலாட்டா ரிட்ஸ்’ என்ற சேனலின் அறிமுக நேர்காணலில் விக்னேஷ் சிவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் சார்ந்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் விரும்பி சென்று உணவருந்தும் உணவகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சென்னையில் ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தில் ஜப்பான் கறி உணவு பிடித்ததாக இருக்கும் என்றார். மேலும் காலை எழுந்ததும் வழக்கமாக செய்யும் வேலை என்ன? என்ற கேள்விக்கு அவர், “ நான் வழக்கமாக காலையில் எழுந்த மாட்டேன். ஏனென்றால் நான் அதிகாலையில் தான் தூங்க செல்வேன். ரெக்கார்டிங், படப்பிடிப்பு எல்லாம் இரவு நேரத்தில் இருப்பது எனக்கு பிடிக்கும். அதனாலே நான் காலை விடியலை பார்த்ததில்லை.”’ என்றார். மேலும் தொடர்ந்து நயன்தாரா சமைப்பதில் உங்களுக்கு பிடித்த உணவு எது? என்ற கேள்விக்கு, “அவர் சிக்கன் குழம்பு அருமையாக செய்வார். மேலும் அவர் கேக்குகளும் நன்றாக இருக்கும் “ என்றார் விக்னேஷ் சிவன்.
நீங்கள் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்கள் எந்த இசையமைப்பாளரின் பாடலாக இருக்கும்? என்ற கேள்விக்கு அனிருத், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ரித்விஸ் “ என்று பட்டியலிட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
மேலும் பல அட்டகாசமான கேள்விகளுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் பதில் கொண்ட முழு வீடியோவை காண..