தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் இயக்குனர்களின் பட்டியலில் கட்டாயமாக முன்னணி இடத்தில் இருப்பவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கடைசியாக இவரது இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த மாநாடு மற்றும் அசோக்செல்வன் நடித்து வெளிவந்த மன்மதலீலை ஆகிய திரைப்படங்கள் வழக்கம்போல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.

அடுத்ததாக தனது திரைப்பயனத்தில் 11வது படமாக தயாராகும் புதிய படத்தில் முதல்முறையாக தெலுங்கு திரையுலகில் களமிறங்கியுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் VP11/NC22 திரைப்படத்தை இயக்குகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ்நிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். 

DY சத்தியநாராயணா கலை இயக்குனராக பணியாற்ற, ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், NC22 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் - நடிகைகள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

முன்பே அறிவித்தபடி பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் NC22 படத்தில், தற்போது அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் ஆகியோர் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம்ஜி இல்லாமல் வெங்கட்பிரபு படமா..? இந்த நட்சத்திரங்களின் பட்டியலில் பிரேம்ஜியும் இருக்கிறார். மேலும் வெங்கட்பிரபுவின் NC22 திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

The Ensemble Cast of #NC22 to Enthrall🔥@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @thearvindswami @realsarathkumar #Priyamani @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @SS_Screens #SampathRaj @Premgiamaren @VennelaKishore #PremiVishwanath @srkathiir @rajeevan69 @abburiravi #VP11 pic.twitter.com/GEPcaRBKAO

— Srinivasaa Silver Screen (@SS_Screens) October 14, 2022