நடிகர் பிரசன்னா பற்றி விஸ்வாசம் படத்தின் எடிட்டர் !
By Sakthi Priyan | Galatta | November 23, 2018 18:24 PM IST
சமீபத்தில் நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தாளியாக பங்குபெற்றார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் மூலம் நடிகர் பிரசன்னாவை விமர்சித்தார் ஒருவர். எந்தவொரு கோபமும் இல்லாமல், சற்றும் தலைக்காமல் தனது தெளிவான பதிலை தெரிவித்தார் நடிகர் பிரசன்னா.
இதுகுறித்து தமிழ் சினிமாவின் பிஸியான எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பதிவில், வாழக்கை என்பது அன்பு அல்லது வெறுப்பு நிறைந்த ஒன்று என்றால் அன்பை தேர்ந்தெடுங்கள் என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்தை குறிப்பிட்டு தனது அன்பை பதிவிட்டிருக்கிறார்.
When life is between choice of Love & Hatred, choose Love - @arrahman @Prasanna_actor more love to you🤗❤️ https://t.co/xycRbHngBb
— Editor Ruben (@AntonyLRuben) November 23, 2018