கடந்த 2015 ம் ஆண்டு விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடி தான். அட்டகாசமான கதைக்களத்தில் திரையரங்கம் அதிரும் நகைச்சுவையில் டார்க் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் நானும் ரௌடி தான். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து ரசிகர்களுக்கு இன்றும் மறக்க முடியாத திரைப்படமாகவும் புத்துணர்வு அளிக்கக்கூடிய படமாகவும் இருந்து வருகிறது. முதல் படத்தில் கவனிக்க படாத இயக்குனர் விக்னேஷ் சிவன் தனுஷ் தயாரிப்பில் உருவான இப்படம் மூலம் மிகபெரிய அளவு பிரபலமடைந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மட்டுமல்லாமல் நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிரூத் ஆகியோருக்கும் இப்படம் நிச்சயம் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது என்றால் மிகையாகாது.
இப்படம் குறித்தும் இப்படத்தில் முன்னணி நடிகையாக தமிழில் வலம் வந்த நயன்தாரா உள்ளே வந்தது குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நமது கலாட்டா தமிழ் வழங்கிய கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர், "தனுஷ் சார் தான் நயன்தாரா கிட்ட கதை சொல்றியா னு கேட்டார். நான் சரி ன்னடு ஒரு 1.30 மணி நேரம் நயன்தாரா மேம் பார்த்துட்டாச்சும் வந்துடலாம் னு நினைச்சேன். அந்த நேரத்தில் நான் நஸ்ரியா நடிக்க வைக்கலாம்னு யோசிச்சேன்.. தனுஷ் சார் சொன்னதும் நான் ஓகே னு சொல்லிட்டேன். அந்த நேரத்துல ஆட்டோ ல தான் போனேன்.
என்னுடைய இணை இயக்குனரிடம் முன்பே சொன்னேன் நயன்தாரா மேடம் கண்டிப்பா கதைக்கு நோ னு தான் சொல்லுவாங்க. நான் 1 மணி நேரத்துல வந்துடவன். னு சொல்லிட்டு போய் அதே மாதிரி கதையெல்லாம் சொன்னேன். அவங்க க்ரீன் டீ லாம் கொடுத்தாங்க. எனக்கு க்ரீன் டீ சுத்தமா பிடிக்காது. ஆனா அந்த நேரத்துல எதுவும் சொல்ல முடியல.. அவங்க கதை கேட்கும் போது ரெடியா னு கேட்கும் போது போன் எடுத்து அதை ஆப் பண்ணிட்டு சொல்லுங்க னு ஆரம்பிச்சாங்க. அவங்களோட progression . கதை சொன்னேன். நிறைய காட்சிகளுக்கு சிரிச்சாங்க...
கதை சொல்லி முடிச்சதும் சரி நான் பன்றேனு சொன்னாங்க.. ரொம்ப நல்லாருக்கு னு சொன்னாங்க.. ஹீரோ யாருனு கேட்டாங்க கௌதம் கார்த்திக் னு சொன்னேன். படத்துல அவங்க போடுற டிரஸ்லாம் அவங்களே தான் டிசைட் பண்ணாங்க.. படம் ஆரம்பிக்கும் முன்பே அவங்களோட பங்குல தெளிவா இருந்தாங்க.. முதல் நாள் காட்சியிலே ஹேர் பேண்ட் போட்டு இருந்தாங்க . நான் காத்துல முடி அசையனும் அதனால் அதை எடுக்க சொல்லி கேட்டேன். அவங்க யோசிச்சாங்க.. முதல் நாளே இரண்டு பேரும் அந்த காட்சிக்கு விவாதம் பண்ணோம். பின் ஹேர் பேண்ட் போட்டு ஒரு காட்சி ஹேர் பேண்ட் போடாம் ஒரு காட்சி படமாக்கினோம். “ என்றார் விக்னேஷ் சிவன்.
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப்பயணம் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..