இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படங்களில் ஒன்று ‘மாமன்னன்’. சமூக கருத்துகளை உள்ளடக்கி திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படமாக கொடுத்து பேர் பெற்ற மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக வெளியான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியான மாமன்னன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொந்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாமன்னன் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் படம் குறித்து திரைபிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் மற்றும் ரசிகர்கள் அவர்களது நேர்மறையான விமர்சனங்களையும் வரவேற்பையும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படம் குறித்து அவரது கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில்,
“மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும் முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு sir இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டு மாமன்னன் படத்திற்கும் நடிகர் வடிவேலுவிற்கும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மாரி செல்வராஜின் @mari_selvaraj கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! #MAAMANNAN
— VigneshShivan (@VigneshShivN) July 5, 2023
வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி… pic.twitter.com/ZFhslzy7oK
அதை தொடர்ந்து மற்றொரு பதிவில், “தமிழரின் பெருமையை தன் இசையின் மூலம் உலகறியச் செய்த ஏ.ஆர்.ரகுமான் சார். இப்படத்தில் தமிழ் உணர்வுகளுக்கு உலகத்தரமான இசையை வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதெல்லாம் இசைப்புயலுக்கு மட்டுமே சாத்தியம் சிறந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஃபகத் ஃபாசிலுக்கு இது இன்னொரு மைல்கல். திரையில் அவரை பார்க்கும் போதெல்லாம் வெறுப்புணர்வு ஏற்படுவதே அவர் நடிப்புக்கு சான்று. மேலும் கீர்த்தி சுரேஷ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என ஒவ்வொருவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி இந்த மாமன்னனுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்!” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழரின் பெருமையை தன் இசையின் மூலம் உலகறியச் செய்த ஏ.ஆர்.ரகுமான் @arrahman sir இப்படத்தில் தமிழ் உணர்வுகளுக்கு உலகத்தரமான இசையை வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பரிய இசையையும் இன்டர்னேஷனல் தரத்தையும் ஒற்றைப் புள்ளியில் கொண்டுவந்து இணைப்பதெல்லாம் இசைப்புயலுக்கு மட்டுமே சாத்தியம்
— VigneshShivan (@VigneshShivN) July 5, 2023
சிறந்த… pic.twitter.com/dPel8YflGc