செஸ் வரலாற்று நிகழ்வில் முக்கியமான நிகழ்வாக இந்தியாவில் கடந்த ஆண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட் மாபெரும் போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகளவில் செஸ் வீரர்கள் பல நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர், இந்தியாவின் செஸ் தலைநகரமான மாநகரம் சென்னையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. முதல்வர் மு க ஸ்டாலின் அரசின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பேசபட்டது. இந்த நிகழ்வில் இயக்குனர் விக்னேஷ் சிவன் விழா ஒருங்கிணைப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார்.துவக்க விழா தொடங்கி நிறைவு விழா வரை விக்னேஷ் சிவன் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் விழா சிறப்பு நிகழ்சிகள் மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. இந்த வரலாற்று போட்டியில் மாபெரும் நிகழ்வை ஒருங்கிணைத்தது குறித்தும் அதற்கு வந்த வரவேற்புகள் குறித்தும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு பாடல் வீடியோவை இயக்கியது குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களிடம் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் ரசிகர்கள் முன்னிலையில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்,"Chess Olympiad நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு போனதும் ரஜினி சார் கால் பண்ணி பேசுனாரு. ‘சாரி விக்னேஷ் லேட் ஆயிடுச்சானு கேட்டாரு..பின் நீங்கதான் பண்ணிருக்கீங்கனு எதிர்பார்க்கவே இல்லை.’ பேசுனாரு.. எனக்கு அது Lifetime settlement டா னு இருந்தது. அதுக்கப்பறம் அந்த நிகழ்ச்சி நன்றி நவிழும் விழா நடந்தது. அங்க எல்லோரும் வந்திருந்தாங்க.. எங்க அம்மா Inspector Category தான்.. நான் எங்க அம்மாவ கூப்டு போனேன். அந்த மேடையில் காவல்துறையில் உயர் அதிகாரிகள், மந்திரிகள், முதலமைச்சர் எல்லோரும் இருக்கும் போது நானும் அம்மாவும் அந்த இடத்துல அந்த மேடையில இருந்தோம். அந்த தருணம் ரொம்ப பயங்கரமா நல்லா இருந்தது. என்கிட்ட ஒரு போட்டோ இருக்கு அத நான் எங்கேயும் பதிவிடல..அந்த புகைப்படத்தில் முதலமைச்சர், கமல் சார், ஏ ஆர் ரகுமான் சார் எல்லாரும் இருப்பாங்க.. நானும் அம்மாவும் அவங்க கூட இருந்தோம்.. அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. முதலமைச்சர் பக்கத்துல இருந்து டின்னரும் சாப்பிட்டோம்..
ஒரு அரசு அந்த நிகழ்ச்சி மேல் இந்தளவு உறுதியா இருந்ததால தான் இந்த விஷயம் சாத்தியம் ஆனது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். CM sir வரைக்கும் அன்னிக்கு நேரத்துக்கு வந்துட்டாங்க.. சரியா மேக்கப் லாம் போட்டு ரெடியா இருந்தாங்க. நான் ஒரு காட்சிக்கு ஒன்மோர் கேட்டேன் . யெஸ் தம்பி நீங்க சொல்லுங்க னு கேட்டுக்கிட்டார். எல்லோரும் அந்த இடத்தில் நல்லபடியாக நடந்து கொண்டார்கள். அந்த நேரத்தில் பயம் எதுவும் வரவில்லை. அந்த நேரத்தில் நம்ம வேலையை சரியா செய்ய முடிந்தது மகாபலிபுரம் இடத்தில் படப்பிடிப்பு எடுக்க அனுமதி கொடுத்தாங்க.. இவ்ளோ பேர் அந்த குறுகிய காலத்தில் பண்ணிருக்கோம். அந்த நேரம் முழுவதும் எனக்கு அருமையான அனுபவம். எனக்கு ஒரு இயக்குனரா நிறைய கற்றுக்கொண்டேன். என்னால் அது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வு அது.." என்றார்.
மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கள் உள்ளடக்கிய வீடியோ இதோ..