"தனியா ரூம்ல இருக்க பயப்படுவாறு!"- இதுவரை வெளிவராத தனுஷின் ஆரம்ப கட்ட திரைப்பயண நினைவுகள்! சுப்பிரமணியம் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ

தனுஷின் ஆரம்ப கட்ட திரைப்பயண நினைவுகள் பகிர்ந்த சுப்பிரமணியம் சிவா,director subramaniam siva about beginning stages of dhanush career | Galatta

தமிழ் சினிமாவின் தரமான நடிகராக வளர்ந்து தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா அரங்கில் வெற்றிக்கொடி நாட்டில் வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் இந்திய சினிமா ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் உடன் ஒரு புதிய படம் மற்றும்  வட சென்னை 2, இயக்குனர் செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2, இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் மேலும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிப்பில் விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிற சூழலில் அடுத்தடுத்து தயாராகி வரும் படங்கள் இன்னும் எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளன. 

அந்த வரிசையில் முன்னதாக ராக்கி, சாண்க காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக தனது திரைப்பயணத்தின் 50 ஆவது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கிறார் தனுஷ். தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய D51 படத்தில் நடிக்கும் தனுஷ் தனது முந்தைய பாலிவுட் படங்களான ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களின் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் உடன் மீண்டும் தேரே இஸ்க் மெய்ன் என்ற புதிய படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட திருடா திருடி படத்தின் இயக்குனரும் பிரபல நடிகருமான சுப்பிரமணியம் சிவா அவர்கள் நடிகர் தனுஷ் பற்றி நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் திருடா திருடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் நடைபெற்ற சில விஷயங்கள் குறித்து பேசிய போது, “திருடா திருடி திரைப்படத்தின் கதையை சொன்ன சமயத்தில் கருணாஸ் அவ்வளவு பெரிய நடிகராக பிரபலம் அடையவில்லை. ஆனால் திருடா திருடி படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் "லோடுக் பாண்டி" என்ற கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமடைந்து விட்டார். அப்போது திருச்சியில், அந்த சமயத்தில் செல்போன் எல்லாம் கிடையாது. ஆட்டோகிராஃப் தான் வாங்குவார்கள். அப்படி இருக்கும் போது எல்லோரும் கருணாஸ் இடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டார்கள். அப்போது தனுஷ் அந்த கூட்டத்தில் இருந்து தனியாக எழுந்து வந்து விடுவார். வந்து என்ன சொல்வார் என்றால், “நமக்கும் இப்படி ஒரு காலம் வரும் அல்லவா?” என்று கேட்பார். அதையெல்லாம் சந்தித்து வரும் சமயத்தில் அந்த காலகட்டத்தில் தனியாக ரூமில் இருக்க கூட தனுஷ் பயப்படுவார். அவருடைய அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார் “அவருடன் யாராவது இருங்கள் தனியாக ரூமில் தங்க வைக்கிறீர்களே” என்று சொல்வார். அந்த மாதிரி எல்லாம் சின்ன பிள்ளையாக அவரை பார்த்தோம். ஆனால் இன்று அவருடைய வளர்ச்சி நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.  இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ்
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் "ஜெயிலர் SHOWCASE!"- ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மிரட்டலான அறிவிப்பு இதோ!

சினிமா

"தனுஷ் அப்போவே ப்ரொடியூசர் ஃபிரண்ட்லி!"- திருடா திருடி படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சுப்பிரமணியம் சிவா! வைரல் வீடியோ

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!