தென்னிந்தியாவின் கைதேர்ந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சூர்யா. தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை வலுவாக்கி வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதை தொடர்ந்து சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கராவுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. தென்னிந்தியாவில் பல சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகும் இப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது.
பேண்டசி கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி நடிகின்றார். அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் படத்திற்கு தேவையான VFX பணிகள் அதிகம் என்பதால் கங்குவா படம் வரும் 2024ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘கங்குவா’ படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தினை பத்து மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷத் யூசுப் படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் படத்தில் மிலன் கலை இயக்கம் செய்ய ஸ்டன்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் படத்திற்கு ஸ்டன்ட் வேலைகள் செய்து வருகிறார்.
சமீபத்தில் கங்குவா படத்தின் சிறப்பு முன்னோட்டதிற்கான படபிடிப்பு நடைபெற்றது. இந்த டீசர் வரும் ஜூலை 23 சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த டீசருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டும் திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் போர் நடக்கும் இடத்தில் சூர்யா வித்யாசமான தோற்றத்தில் குதிரை மீது நிற்பது போன்று உள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
A warrior like no other!
— UV Creations (@UV_Creations) July 21, 2023
A King like none other!
The King arrives 👑#GlimpseOfKanguva on 23rd of July! @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @StudioGreen2 @kegvraja @UV_Creations @saregamasouth #Kanguva 🦅 pic.twitter.com/In1dUBUQt6