இயக்குனர் ஷங்கர் பார்த்து வியந்த தமிழ் படம் !
By Sakthi Priyan | Galatta | October 23, 2018 08:29 AM IST
2.0 படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரிலாக்ஸாக பிற படங்களை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்து தனது ட்விட்டர் தளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். நடிகர்கள் கதிர், ஆனந்தி, யோகிபாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ள இப்படம் சமூகத்திற்கு மிக ஆழமான கருத்தை உணர்த்தியது என்பது அனைவரும் அறிந்தது.
படத்தை பார்த்துவிட்டு இலக்கியம் போல் உள்ளதாகவும். படத்தின் மென்மையான கூற்றுகளை சரியான தருணங்களில் சேர்த்திருப்பது படத்திற்கு வலுவூட்டுகிறது எனவும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை பாராட்டியுள்ளார்.
Pariyerum Perumal movie is like literature in cinema.. deep and disturbing... purely thought provoking...The killer was so terrifying while Jo is a character that’s soothing and softening element used at apt situations.Excellent work by the dir Mari Selvaraj
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 22, 2018
தரமான படம் என்றாலே அனைத்து தரப்பிலுமிருந்து பாராட்டு மழை பெய்துதான் ஆகும். இதுபோன்ற படங்கள் பாடங்களாகவும் விளங்கிவருகிறது.