கோலாகலமாக நடைபெற்ற சர்தார் பட இயக்குனர் PSமித்ரனின் திருமணம்! குவியும் வாழ்த்துகள்

கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் PSமித்ரனின் திருமணம்,Director ps mithran got married with ashameera aiyappan | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து வரும் இயக்குனர் PS.மித்ரன் இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் விஷால் கதாநாயகனாகவும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மிரட்டலான வில்லனாகவும் நடிக்க, விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவான ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இரும்புத்திரை ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தனது முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கைக்கோர்த்தார் PS.மித்ரன்.

வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க தயாரான ஹீரோ திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதும் எதிர்பார்த்த அளவிற்கான பெரும் வெற்றியை பெற ஹீரோ படம் தவறியது. இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த PS.மித்ரன் இயக்கிய திரைப்படம் சர்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிரட்டலான ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக தயாரான சர்தார் திரைப்படத்தில் மிரட்டலான இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்திருந்தார். மேலும் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, லைலா முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்த சர்தார் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் அடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே இயக்குனர் PS.மித்ரன் அடுத்ததாக அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், “தான் அஜித்குமாரின் படத்தை இயக்கவில்லை” என இயக்குனர் PS.மித்ரன் மறுப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி AK62 திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் PS.மித்ரனின் சமூக அக்கறை கொண்ட ஒரு கதையை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் பின்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ நம்ம தகுந்த தகவல்களோ இதுவரை எதுவும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் PS.மித்ரனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. எழுத்தாளரும் சினிமா பத்திரிக்கையாளருமான ஆஷாமீரா ஐயப்பனும் இயக்குனர் PS.மித்ரனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களது காதல் திருமணமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழல் தஞ்சாவூரில் நடைபெற்ற இயக்குனர் PS.மித்ரன் திருமணத்தில் நடிகர் கார்த்தி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களின் இயக்குனரும் மாஸ்டர், விக்ரம், லியோ திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இன்று நேற்று நாளை & அயலான் திரைப்படங்களின் இயக்குனருமான ரவிக்குமார் உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண வாழ்க்கையை தொடங்கும் இயக்குனர் PS.மித்ரன் - ஆஷாமீரா தம்பதியினருக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

 

View this post on Instagram

A post shared by Rathna Kumar (@mr.rathna)

வேகமெடுக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!
சினிமா

வேகமெடுக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

சினிமா

"எச்சரிக்கையே கிடையாது தூக்கிருவோம்!"- தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படக்குழுவின் அதிரடி நடவடிக்கை! விவரம் உள்ளே

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் NEELAM BOOKS-ஐ திறந்து வைத்த உலக நாயகன் கமல்ஹாசன்! புகைப்படங்கள் இதோ
சினிமா

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் NEELAM BOOKS-ஐ திறந்து வைத்த உலக நாயகன் கமல்ஹாசன்! புகைப்படங்கள் இதோ