வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து சிலம்பரசன் TR நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’ ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பார்வை தொடங்கி சமீபத்தில் வெளியான ‘நம்ம சத்தம்’ பாடல் வரை படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கன்னட திரையுலகில் மெகா ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீமேக்காக வெளிவரவிருக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாகவும் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ஒபெலி N.கிருஷ்ணா நமது கலாட்டா தமிழ் மீடியா பேட்டியில் கலந்து கொண்டார்.
இதில் பத்து தல படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் பத்து தல திரைப்படத்திற்காக சிலம்பரசன் உடல் எடை கூடியுள்ளாரா என்ற கேள்விக்கு,
அவர், “வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக ரொம்பவே உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிட்டார். அந்த உடல் அமைப்பு இந்த பத்து தல படத்திற்கு பொருந்தாது. ஒரு நாற்பது வயது மைன் மாபியா செய்யும் ஆள் போல வரவேண்டும் ஒரு பெரியவர் போல இருக்க வேண்டும் என்பதற்காக அவரிடம் கேட்டு கொண்டேன். அதற்கு அவர் எவ்வளவு தேவையோ அந்த அளவு உடல் எடையை கூட்டி நடித்து கொடுத்தார்.” என்றார்
மேலும் இந்த படத்துடன் தொட்டி ஜெயா படத்துடன் ரசிகர்கள் ஒப்பிடுகிறார்கள். ஒருவேளை இது தொட்டி ஜெயாவின் அடுத்த பாகமாக அமையவிருக்குமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது. இதுகுறித்து இயக்குனராகிய உங்கள் பதில் என்ன? என்ற கேள்விக்கு,
அவர், “தொட்டி ஜெயா படத்திற்கும் பத்து தல படத்திற்கும் நிறைய வித்யாசம் உள்ளது.தொட்டி ஜெயா படத்தில் ஒரு 20 வயது மேற்கொண்ட நடுத்தர வாலிபன் கதாபாத்திரம். காதலுக்காக ஓடுகிற கதாபாத்திரம். ஆனால் இந்த பத்து தல படத்தில் ஒரு mature ஆன கதாபாத்திரம் இருக்கும். எதையும் நிதானமா யோசிச்சு செய்கிற கதாபாத்திரம் அதனால் வித்யாசம் இருக்கு” என்றார்
மேலும் பத்து தல படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பத்து தல பட இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணா நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..