கடந்த ஏப்ரல் 28 ம் தேதி கோடை விடுமுறையையொட்டி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, அஷ்வின் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர பட்டாளம் நடித்த இப்படம் ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 10 நாட்களை கடந்தும் இன்றும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை மக்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் உலகளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்க முக்கிய காரணம் இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. முதல் பாகமே இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்பை எடுத்து கொடுத்தது.
கிட்டத்தட்ட 32 வது நாளிலே உலகளவில் 500 கோடி என்ற இலக்கை எளிதாக கடந்து விட்டது. அதாவது இயக்குனர் ஷங்கர் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான 2.0 படத்தின் சாதனைக்கு பின் வசூல் செய்த திரைப்படம் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் பொன்னியின் செல்வன் 1 தமிழகத்தில் மட்டும் ரூ 250 கோடியை அசால்டாக தட்டி தூக்கி அதிக வசூல் செய்த படங்களில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தது. உள்நாட்டு வசூலாக ரூ.335 கோடி பெற்றது. வெறும் 30 நாளில் வசூலித்த இப்படம் 30 நாள் தாண்டியும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக இப்படம் 50 வது நாளில் ரூ 500 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்று அறிவிப்பை வெளியிட்டது. இது மட்டுமல்லாமல் டிஜிட்டல் விற்பனை, தொலைகாட்சி விற்பனை என்று வசூலில் எளிதாக ரூ 1000 கோடியை தொட்டிருக்கும் என்று கணித்தனர் திரை விமர்சகர்கள்.
Somebody pls pinch me.. & tell me this is not a dream. #PonniyinSelvan pic.twitter.com/zZ7BhAm1HF
— Vikram (@chiyaan) November 18, 2022
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28 ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் துவக்கத்தில் நிதானமாக திரையரங்குகளில் வசூலை ஈட்டிவந்தது. முதல் படத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு ஒப்பனிங் சற்று குறைவாக தான் இருந்தது. இருப்பினும் படத்திற்கு மக்கள் ஆதரவு குறையாமல் சென்று கொண்டிருக்க முதல் வாரத்தில் 284.29 கோடியை உலகளவில் வசூலித்தது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம்.
பொதுவாகவே சமீப காலத்தில் வெளியாகும் படங்கள் ஒருவாரத்தில் வசூலை தட்டி சென்று இரண்டாவது வாரத்தில் காணமல் பொய் விடுகின்றது, அந்த நிலையை தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மாற்றியுள்ளது. அதே நிதானத்துடன் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி இதுவரை 10 நாள் நிறைவடைந்த நிலையில் ரூ.300 கோடி வசூலை செய்துள்ளது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம். இதுகுறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
#PS2 continues conquering the box office worldwide with a 300 crore+ collection!
— Lyca Productions (@LycaProductions) May 8, 2023
Book your tickets now
🔗 https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3#PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_… pic.twitter.com/sncJ7lPf4K
மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமம், தொலைக்காட்சி உரிமம் என்று பல வகையில் ஏற்கனவே வசூல் அள்ளிவிட்ட நிலையிலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நிதானமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. முதல் பாகத்தை விடவும் நல்ல வரவேற்பை வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெற்று வரும் போன்னியின் செல்வன் 2 விரைவில் அதிகாரபூர்வமாக ரூ 500 கோடியை பெற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழ் சினிமாவில் பெரிய நட்சதிரங்களின் படங்கள் இந்த மாதம் எதுவும் வெளிவராத நிலையில் பொன்னியின் செல்வன் எளிதாக அதன் வசூல் எல்லையை தொட்டு விடும் என்பது திரை விமர்சகரிகளின் கருத்து.