வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக அஜித்குமார் நடிப்பில் வெளிவர தயாராகி வரும் திரைப்படம் துணிவு.

மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் அஜித் குமார் - H.வினோத் - போனி கபூர் - நீரவ் ஷா கூட்டணியில் உருவாகி இருக்கும் துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகிற ஜனவரி 12ம் தேதி பொங்கல் வெளியீடாக துணிவு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதே தினத்தில் தளபதி விஜயின் வாரிசு படமும் ரிலீஸாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கும் தளபதி 67 படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை கடந்த டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.