ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு ஸ்லாகித்து பேசப்பட்டு வரும் திரைப்படம் மரியான். 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இப்படத்தின் மீதான ஈர்ப்பு குறையாமல் இருந்து வருகிறது. இயக்குனர் பரத் பாலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். இயக்குனர் பரத் பாலா இயக்கத்தில் காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக இப்படம் கொண்டாடப்பட்டது. மேலும் பல விருது மேடைகளில் பல விருதுகளுடன் அலங்கரித்து மரியான். இப்படம் வெளியாகி 10 வருடம் நிறைவடைந்த நிலையில் 10 years of Maryan என்ற ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் 10 ஆண்டு நிறைவு செய்த மரியான் திரைப்படம் குறித்து நமது கலாட்டா சினிமாவிற்கு மரியான் பட இயக்குனர் பரத் பாலா அளித்த சிறப்பு பேட்டியில் மரியான் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.அதில் பாடல் உருவான விதம் குறித்து பேசினார். முதலில் படத்தில் இடம் பெற்ற நேற்று அவள் இருந்தால் பாடல் குறித்து பேசினார்.
"அதோ அந்த பறவை போல.. பாடல் ஒன்று வேண்டும் னு ரஹ்மானிடம் கேட்டேன். அவர் வாலியை போய் பாருன்னு சொன்னார். அவர் பாடலுக்கான காட்சியை கேட்கல.. மொத்த கதையையும் கேட்டார். ஒரு தயாரிப்பாளர் , நடிகர் கிட்ட எப்படி கதை சொன்னனோ அதே மாதிரி அவரிடமும் சொன்னேன். அவர் கதை கேட்டு நல்லாருக்கு னு சொன்னார்.
திரும்பவும் ஒருநாள் ரஹ்மான் , நான் வாலி சார் ஒண்ணா உட்கார்ந்து அந்ந பாடலை பண்ணோம். உடனடியா அவர் 'நேற்று அவள் இருந்தால் அவளோடு நானும் இருந்தோம்.. ஆகத்தில் நூறு நிலா' என்று வரிசையாய் சொன்னார். ஒரு 30 நிமிஷத்தில் அந்த பாடல் முடிந்தது." என்றார். மேலும் தொடர்ந்து பாடல் படப்பிடிப்பு குறித்து பேசுகையில். "அந்த பாடலின் வீடியோவில் தனுஷ் பார்வதி டார்க் காஸ்டியூம் போட்ருப்பாங்க.. வீடியோவில் எதுவும் தெரியாது. பின்னாடி வெறும் அலைகள் தான். மதியம் உச்சி வெயிலில் எடுத்தோம். அந்த பாடல் இன்னும் அழகி மாறிடுச்சு" என்றார் இயக்குனர் பரத் பாலா..
அதன்பின்னர் யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த கடல் ராசா பாடல் குறித்து பேசுகையில்,
"யுவன் பாடுனது சர்ப்ரைஸ் தான். கடல் ராசா பாடலை பாடியது. சித் ஸ்ரீராம். ஆனா எதோ ஒரு இடத்துல ஏஆர் ரஹ்மான் சொன்ன ஈரம் அந்த பாட்டுல இல்ல.. கடலோட சம்மந்தப்பட்ட அந்த குரல்வளம் அதுல இல்ல..
நான் ரஹ்மானிட்ட சொல்லிட்டே இருந்தேன் இது பத்தி. இந்த விஷயத்துல என்ன நினைச்சு கண்டிப்பா எரிச்சலடைந்திருப்பார். நான் சொல்லிட்டே இருந்தேன் நம்ம எதனா பண்ணனும் னு திடீருனு ஒருநாள் ரெக்கார்ட் பண்ணலாம் வா னு கூப்டாரு.. போனா அங்க யுவனை கூப்டாரு. அந்த முழு ராத்திரியில யுவன் எளிமையா அதை பாடி கொடுத்தார். அந்த பாட்டு தனுஷ் தான் எழுதிருப்பார். அதனால் யுவன், தனுஷ், ரஹ்மான்ட்டு அந்த பாடலுக்கு தனி சிறப்பா அமைஞ்சிடுச்சு.." என்றார் இயக்குனர் பரத் பாலா..
மேலும் இயக்குனர் பரத் பாலா அவர்கள் மரியான் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..