தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உருவ கேலி செய்யப்பட்டு அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளான சாதாரண நடிகராக தனது பயணத்தை தொடங்கி நாளுக்கு நாள், படத்திற்கு படம், கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரம் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஆகச்சிறந்த நடிகராக உயர்ந்து தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும், இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும், உலக சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகராகவும், உச்சம் தொட்டு முத்திரை பதித்தவர் நடிகர் தனுஷ். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மாறன் திரைப்படம் நேரடியாக Disney+ Hotstar தளத்தில் வெளியாக, அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த பிரம்மாண்டமான ஆக்சன் படமாக தி க்ரே மேன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அனைத்து வயது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக, தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.
அந்த வகையில், இந்த 2023ம் ஆண்டிலும் தனுஷ் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. அதில் முதலாவதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட அதிரடி ஆக்ஷன் ப்ளாக் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பரில் பூஜையோடு தொடங்கப்பட்டது.
இதனையடுத்து தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட, வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸானது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்ட வாத்தி திரைப்படம், தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்டாக பாகஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட வாத்தி திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், வருகிற மார்ச் 17ஆம் தேதி முதல் Netflix தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
If Dhanush was our #Vaathi, we’d be ready to give up P.T period to attend his class!📚 🏫
— Netflix India South (@Netflix_INSouth) March 12, 2023
Vaathi is coming to Netflix on the 17th of March! 🤩 pic.twitter.com/GJbqgZ0zFY