கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரை விமர்சனம் !
By Aravind Selvam | Galatta | April 12, 2019 13:26 PM IST
ஒரு தயாரிப்பாளராக பல வித்தியாசமான படங்களை தந்து வெற்றிகளை கண்ட சி.வி.குமார் ,இயக்குனராகவும் தனது முதல் படமான மாயவன் மூலம் வித்தியாசமான முயற்சியை கையாண்டார்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்.இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பார்க்கலாம்
கதை : ஒரு போதை கும்பலில் வேலை பார்க்கும் கணவன், திடீரென அவர்களால் கொல்லப்பட கொலைக்கான காரணத்தை தேடி அவர்களை பழி வாங்க துடிக்கும் மனைவி.வில்லன்களை பழிவாங்கினாரா இல்லையா என்பது மீதிக்கதை.
இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்திருந்தாலும் ஹீரோயினை முன்னிறுத்தி இந்த கதையை நகர்த்திய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.ஆனால் அதே சமயம் பலருக்கும் பரீட்சயமில்லாத பல முகங்கள் திரையில் வருவது படத்திற்கு பின்னடைவாக அமைகிறது. படத்தின் ஹீரோயின் பிரியங்கா ரூத் தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.ரொமான்ஸ்,சண்டை காட்சிகள் என எது கிடைத்தாலும் தனது முத்திரையை பதிக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றிய ஹீரோ அசோக் தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார்.டேனியல் பாலாஜி தனது அசால்டான நடிப்பால் அனைவரையும் கவருகிறார்.ஆடுகளம் நரேன் சில காட்சிகள் மட்டுமே வருகிறார்.மற்ற நடிகர்கள் நடிப்பு மனதில் ஒட்டும் படி இல்லை.
ஹரி dafusiyaவின் இசையில் பாடல்கள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லைஷ்யாமளாங்கனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்து.படத்தின் மற்றொரு பெரிய மைனஸ் படத்தின் நீளம் சில காட்சிகளை நீக்கி இருந்தால் இந்த படம் ஒரு மிக சிறந்த Gangster படமாக ஆவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும்.
மொத்தத்தில் வழக்கமான பாணியில் செல்லாமல் ஹீரோயினை வைத்து கதை நகர்த்தியது நல்ல விஷயம் தான் ஆனால் கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
கலாட்டா ரேட்டிங் - 2.25/5