முன்னணி சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | September 06, 2021 13:26 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.
இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.
அடுத்தாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் ரேஷ்மா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் நாயகனாக ரேஷ்மாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மதன் நடிக்கிறார்.படவா கோபி,சோனா,ரேஷ்மா,சுஜுவாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடர் இதுவரை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது,இனி இந்த தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அபிமான #AbhiTailor தொடர்! 🪡
இன்று முதல், திங்கள் - சனி இரவு 9:30 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில்#AshAbhi | #AshokTheBoss | #ColorsTamil pic.twitter.com/d8lLEN6JCw— Colors Tamil (@ColorsTvTamil) September 6, 2021