கடாரம் கொண்டான் திரை விமர்சனம் !
By Aravind Selvam | Galatta | July 19, 2019 10:52 AM IST
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.கடந்த ஆண்டு ஸ்கெட்ச்,சாமி 2 என இரண்டு கமர்ஷியல் படங்களை தொடர்ந்து நடித்திருக்கும் படம் கடாரம் கொண்டான்.இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த படம் சீயான் விக்ரமிற்கு ஒரு பெரிய வெற்றியை தருமா என்பதை பார்க்கலாம்
கோலாலம்பூரில் குடியேறும் டாக்டர் வாசு மற்றும் அவரது மனைவி ஆதிரா.கர்பமாக இருக்கும் தன் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக தனது வேலையை இரவுக்கு மாற்றும் வாசு.அப்போது அவர் வேலைபார்க்கும் மருத்துவமனையில் காயங்களுடன் அட்மிட் ஆகும் KK.KK-வை கொல்ல துரத்தும் கும்பல் அவரை பத்திரமாக காப்பற்றி தர வேண்டி ஆதிராவை கடத்தும் KKவின் கூட்டாளி.யார் இந்த KK ஆதிரா பத்திரமாக மீட்கப்பட்டாரா என்பது தான் மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது விக்ரம் தான்.அவரது நடிப்புத்திறனை பற்றி நமக்கு நன்றாக தெரியும்.தன்னுடைய ஸ்டைலால் நம்மை கட்டிபோடுகிறார்.திரையில் விக்ரமை பார்ப்பதற்கு அவ்வளவு கிளாஸாக உள்ளது என்றாலும் அவருக்கு இன்னும் ஸ்க்ரீன்டைம் கொடுத்திருக்கலாம்.விக்ரம் ஸ்க்ரீனில் தோன்றினாலே விசில் சத்தங்கள் பறக்கின்றன.இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அசால்டாக ஸ்கோர் செய்கிறார்.விக்ரம் போன்ற ஒரு நடிகரை படம்நெடுக பார்க்கவேண்டும் என்று ஆசையுடன் வரும் ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை தரும்.
ஆதிரா என்ற கதாபாத்திரத்துக்கு தன்னால் முடிந்தளவு உயிர்கொடுத்திருக்கிறார் அக்ஷரா ஹாசன்.அபி ஹசனுக்கு இது ஒரு சிறந்த துவக்கம்.அபி ஹசன் அக்ஷரா ஹாசன் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது.முதல் பாதி மெதுவாக சென்றாலும் நம்மை சீட் நுனியில் அமரச்செய்கிறது.படத்தின் இன்டெர்வல் காட்சி பெரிதாக நம்மை ஈர்க்காதது படத்தின் மைனஸ் அடுத்த பாதியில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உண்டாக்காமல் போகிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் கதையை முடிக்கவேண்டும் என்பதற்காக விறுவிறுவென முடித்தது போல் இருந்தது.விக்ரம் யார் என்பதை டக்கென்று ஒரே சீனில் சொல்லாமல் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.விக்ரம் மற்றும் அபி இருவரின் முகங்களும் பிளாஷ் நியூஸில் வந்தாலும் அவர்கள் அசால்டாக ஊருக்குள் சுற்றி வருவது,வீடியோ கேமில் வருவது போல் கார்களை எடுத்து செல்வது என படத்தின் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
ராஜேஷ் ம செல்வா படத்தினை மிக அழகாக கொண்டுசெல்கிறார்.ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் தமிழில் ஒரு ஹாலிவுட் தரத்திலான படத்தினை கொடுத்திருக்கலாம்.அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் ஆனாலும் சரி,விக்ரமை மாஸாக காட்டுவதாக இருந்தாலும் சரி தனது கேமரா மூலம் அனைத்தையும் அழகாக காட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ் குத்தா.
ஜிப்ரான் இந்த படத்தின் மற்றுமொரு நாயகனாக இருக்கிறார்.பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்துளளார்.படத்தின் மற்றுமொரு பிளஸ் படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் மட்டுமே ஓடுவது இந்த படத்தை விறுவிறுப்பாக கொண்டுசெல்கிறது.அனல் பறக்கும் ஆக்ஷன்,ஸ்டைல் என்று இந்த கடாரம் கொண்டான் நம்மிடம் கவனம் ஈர்க்கிறான்.
கலாட்டா ரேட்டிங் - 2.5/5