"என் குரலை வைப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை?"- லியோ படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் செய்தது குறித்து பேசிய சின்மயி! வைரல் வீடியோ 

லியோ படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் செய்தது குறித்து பேசிய சின்மயி,chinmayi opens about dibbing for trisha in leo movie | Galatta

மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக  இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகமெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான லியோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நம்பகத்தன்மை கொண்ட மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சியாக கழுதைப்புலி உடனான ஒரு மிரள வைக்கும் காட்சி உட்பட பல அட்டகாசமான விஷுவல் ட்ரீட் கொண்ட லியோ படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் எதிர்பார்த்தபடியே லியோ திரைப்படத்தில் எக்கச்சக்கமான சர்ப்ரைஸ்களும் ரசிகர்களுக்கு நிறைந்திருக்கின்றன.  இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி டப்பிங்கில் குரல் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே த்ரிஷாவின் விண்ணைத்தாண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை, 96 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டப்பிங் கொடுத்த சின்மயி அவர்கள் தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலும் டப்பிங் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த சின்மயி அவர்கள் லியோ திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார். இப்படி பேசுகையில், “கண்டிப்பாக ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பிற்காக நிச்சயமாக லோகேஷ் சார், லலித் சார், அசோசியேட் சத்தியராஜ், என்னுடைய குரலை பதிவு செய்த இன்ஜினியர்… அவர்கள் எல்லோருக்கும் கட்டாயமாக நன்றி சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம், “நீங்கள் த்ரிஷா அவர்களுக்கு குரல் கொடுக்கும் போது எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். அதை குறிப்பிட்டு பாராட்டுவார்கள் கடந்து கொஞ்ச காலமாக அதை மிஸ் செய்து கொண்டிருந்தோம்..” என சொன்ன போது, “ஏனென்றால் படத்தில் என் குரலை வைப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை தெரிந்த பிறகு அதை மாற்ற சொல்லி ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன் நிறைய நேரம் யோசித்து, அப்புறம் ராகுலிடம் கலந்துரையாடி அதன் பிறகு தான் இந்த வாய்ப்புக்காக நன்றி கடன் பட்டிருக்கிறேன் என அந்த ட்வீட்டை போட்டேன். ஏற்கனவே சொல்லி இருந்தேன் நான் மைக்கை பார்த்தபோது மிகவும் எமோஷனல் ஆகிவிட்டேன். கடைசியாக ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடி தமிழ் படத்திற்கு அதுவும் எவ்வளவு பெரிய படம்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்ட சின்மயி பேசிய அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.