இம்சை அரசன் 23ஆம் புலிகேசி - புலி இயக்குனர் சிம்பு தேவனின் புது படத்தில் கைகோர்த்த யோகி பாபு... கவனம் ஈர்க்கும் டைட்டில் அறிவிப்பு வீடியோ!

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் அறிவிப்பு,chimbu devan yogi babu in boat movie announcement | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது. வைகைப்புயல் வடிவேலு அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். தனக்கென தனி பாணியில் நடப்பு அரசியலையும் வாழ்வியலையும் நையாண்டியோடு கலந்து கதை சொல்லும் சிம்பு தேவனின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் பிரகாஷ்ராஜ், சந்தானம் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் இணைந்து நடித்த அறை எண் 305 ல் கடவுள் என தனது இரண்டாவது படத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சிம்பு தேவன், தனது மூன்றாவது படமாக ராகவா லாரன்ஸ்க்கு கதாநாயகனாக நடித்த வித்தியாசமான கௌபாய் காமெடி திரைப்படமாக உருவாக்கிய இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனை அடுத்து அருள்நிதி கதாநாயகனாக நடிக்க வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கிய ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும் திரைப்படத்தை தொடரந்து தனது அடுத்த படைப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் முறை தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த புலி திரைப்படத்தை இயக்குனர் சிம்பு தேவன் உருவாக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த புலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு தனது ஆந்தாலாஜி படமாக கசடதபற எனும் படத்தை இயக்கி மீண்டும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என ரசிகர்களின் மனதில் பதிந்த இயக்குனர் சிம்பு தேவன் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜி வெப் சீரிஸில் கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும் என்ற எபிசோடை இயக்கினார்.

இந்த வரிசையில் இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக கைகோர்த்து இருக்கிறார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டைன்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிம்பு தேவன் எழுதி இயக்கியிருக்கும் இந்த புதிய படத்திற்கு போட் என பெயரிடப்பட்டுள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், மணி மாறன் படத்தொகுப்பு செய்யும் போட் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் முற்றிலும் மாறுபட்ட அழுத்தமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வரும் யோகி பாபு அவர்களும் தனக்கென தனி பாணியில் தரமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் சிம்பு தேவன் அவர்களும் போட் படத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முழுக்க முழுக்க நடுக்கடலில் நகைச்சுவை தெறிக்கும் அட்டகாசமான காமெடி ரைடாக தயாராகும் இந்த போட் திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் நடு கடலில் போட்டில் படப்பிடிப்பை துவங்கும் வீடியோ உடன் கூடிய அறிவிப்பு ப்ரோமோ ஒன்றை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

'ஹேய் இங்க நான் தான் கிங்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா மாஸான ஹுக்கும் பாடல் முன்னோட்டம்! அதிரடி வீடியோ இதோ
சினிமா

'ஹேய் இங்க நான் தான் கிங்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா மாஸான ஹுக்கும் பாடல் முன்னோட்டம்! அதிரடி வீடியோ இதோ

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்
சினிமா

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்

ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய பவர்ஃபுல் படம்... டைரி இயக்குனரின் அடுத்த படைப்பு! விவரம் உள்ளே
சினிமா

ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய பவர்ஃபுல் படம்... டைரி இயக்குனரின் அடுத்த படைப்பு! விவரம் உள்ளே