சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டு! புகைப்படம் இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பார்த்த முதல்வர் நெல்சனுக்கு பாராட்டு,chief minister mk stalin met and appreciated nelson for jailer | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் பக்கா ஆக்சன் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து ரசித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இயக்குனர் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இயக்குனர் நெல்சன். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கிய இயக்குனர் நெல்சன் தனது இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டாக்டர் படத்தை உருவாக்கினார். கோலமாவு கோகிலா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. 

தனக்கென தனி பாணியில் டார்க் காமெடி மற்றும் ஆக்சன் கலந்து பக்கா என்டர்டெய்னிங்கான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் கைகோர்த்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் பீஸ்ட் திரைப்படம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்கள் & ட்ரோல்ல்களுக்கு நடுவில் தனது நான்காவது படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த இயக்குனர் நெல்சன் உருவாக்கிய திரைப்படம் தான் ஜெயிலர்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகியுள்ளது.

தனது முந்தைய எதிர்மறை விமர்சனங்களை சொல்லி அடித்தது போல பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை செம்ம ட்ரீட்டாக கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன். உலகம் முழுவதும் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்து இயக்குனர் நெல்சன் , முதல்வர் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியிட்டு, "ஜெயிலர் படம் பார்த்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களுக்கு நன்றி... உங்களுடைய பாராட்டுகளுக்கும் ஊக்கவிப்பிற்கும் நன்றி... நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உங்களது வார்த்தைகளால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். இயக்குனர் நெல்சனின் அந்தப் பதிவு மற்றும் புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Thank you u so much honourable Chief minister @mkstalin sir for watching #jailer … thanks for all the appreciation and motivation sir 🙏🙏😊😊 cast and crew is really happy with ur words 😊🙏 @rajinikanth sir #kalanithimaran sir #kaviyamaran @anirudhofficial @sunpictures pic.twitter.com/3L4LUY5XMd

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 11, 2023