ஜெய் பீம் கூட்டணியில் உருவாகும் 'சத்யதேவ் சட்ட அகாடமி'.. – நடிகர் சூர்யாவை பாராட்டிய முதல்வர் முக ஸ்டாலின்.! விவரம் உள்ளே..

நடிகர் சூர்யாவின் சமூக சேவையை பாராட்டிய முதல்வர் மு க ஸ்டாலின் CM stalin congrats to Suriya Social activities | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தேர்ந்த நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். தற்போது சூர்யா இயக்குனர் சிவா கூட்டணியில் பிரமாண்ட பொருட் செலவில் 3D தொழில்நுட்பங்களில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் பணியாற்றி வருகிறார். அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே சூர்யா தனது அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பல சமூக சேவைகளை கல்வி சார்ந்து செய்து வருகிறார். ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்ற மனிதராய் விளங்கும் சூர்யா அவரது அகரம் அறக்கட்டளை மூலம் நேற்று விருது வழங்கும் விழா நடத்தி கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்கினார். இவ்விழாவில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் கடந்த முன்னாள் நீதிபதி சந்துரு முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள 'சத்யதேவ் சட்ட அகாடமி'யை உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி “சத்தியதேவ்” நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் “சத்தியதேவ் லா அகாடமி”-யை (Sathyadev Law Academy) தொடங்கி வைத்து, அதன் இலட்சினையை வெளியிட்டார்.

ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த சத்யதேவ் லா அகாடமி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள்/சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு “யூ-டியூப்” வலைதளத்தில் பதிவேற்றப்படும் அதனை . மாணவர்கள் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம்.  மேலும் பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவின் “2D எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் வழங்கிட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வு குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில்,

"சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்ய தேவ் லா அகாடமி  யைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. த செ ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முதல்வரின் பதிவினை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

 

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய… pic.twitter.com/8jHf1SjJFI

— M.K.Stalin (@mkstalin) July 16, 2023

“கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும்..” நெகிழ்சியான தருணங்களுடன் நடிகர் சூர்யா கொடுத்த அறிவுரை..
சினிமா

“கல்வி மூலமா வாழ்கையை படிக்கனும்..” நெகிழ்சியான தருணங்களுடன் நடிகர் சூர்யா கொடுத்த அறிவுரை..

‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய திரைப்படம்.. அட்டகாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..
சினிமா

‘மாமன்னன்’ வெற்றியை தொடர்ந்து தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முக்கிய திரைப்படம்.. அட்டகாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் தளபதி விஜய்.! கவனம் ஈர்க்கும் மக்கள் இயக்கத்தினரின் பயிலகம்..
சினிமா

மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்கும் தளபதி விஜய்.! கவனம் ஈர்க்கும் மக்கள் இயக்கத்தினரின் பயிலகம்..