சென்னை முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் சூழலில், சென்னை நகராட்சி அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று அவர்களின் பயண விவரங்களை சோதித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. 

Vijay

பிரதமரின் உத்தரவின்படி நாடு முழுவதும்  21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தின் திரை நட்சத்திரங்களான விஜய்யும் அஜித்தும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக எந்தப் பங்களிப்பும் ஏன் செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

VijayHouse

நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது.