தமிழ் சினிமாவில் பிரபல குணசித்திர நடிகரும் வில்லனாகவும் கலக்கி வருபவர் ஜான் கொக்கன். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வெம்புலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவு பிரபலமடைந்தார். வீரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தவர் ஜான் கொக்கன். அதன்படி பிரம்மாண்ட திரைப்படமான இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலியில் காலகேயர்களில் ஒருவராகவும் கன்னட திரையுலகில் வியக்க வைத்த கேஜிஎப் – ல் கேங்க்ஸ்டராகவும் நடித்து கவனம் பெற்றார். சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பையடுத்து தொடர்ந்து அட்டகாசமான பல படங்களில் ஜான் கொக்கன் அவருக்கு வாய்புகள் குவிய தொடங்கியது அதன்படி இந்த ஆண்டு அஜித் குமார் இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் உருவான துணிவு திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். அதை தொடர்ந்து தற்போது ஜான் கொக்கன் தனுஷ் நடிப்பில் பீரியட் திரைப்படமாக அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ல் நண்பன், பீட்சா, அந்தகாரம் உள்ளிட்ட படங்களில்நடித்து பிரபலமான பூஜா ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதை தனது சமூக வலைதளங்களில் தெரிவித்தார் ஜான் கொக்கன். இதையடுத்து திரைபிரபலங்கள், ரசிகர்கள் என்று அவருக்கு வாய்புகள் குவிந்தது. அதை தொடர்ந்து குழந்தைக்கு ‘கியான் கொக்கன்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து முதல் முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜான் கொக்கன். அவரது மகனை ஏந்தியபடி நிற்கும் ஜான் கொக்கன் புகைப்படத்துடன் “மற்றவர் கதைகளில் நான் வில்லன்.. ஆனால் இந்த கதையில் மட்டும் தான் நான் என் மகனுக்கு ஹீரோவாக இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் தனது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Every other story, I am the Villain.
— John Kokken (@highonkokken) May 16, 2023
This is the only story where I get to play the Hero for my son.#dada #dadandson #fatherhood pic.twitter.com/hLLHqNjPi9