ஜாக்கி சான், டாம் குரூஸை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான் – உற்சாகத்தில் ரசிகர்கள் .. வைரலாகி வரும் புள்ளி விவர பட்டியல் இதோ..
By Vijay Desing | Galatta | January 11, 2023 13:07 PM IST
ஆண்டுதோறும் உலகெங்கும் பல்வேறு அடிப்படையில் புள்ளி விவரக்கணக்குகள் நடத்தி பல நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வெளியிடப்படுவது வழக்கம். இந்தாண்டும் பல துறைகளின் அடிப்படையில் பட்டியலை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. அதன்படி ‘world of statistics’ என்ற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் படி பட்டியலை வெளியிட்டது. அதில், உலகின் உள்ள பணக்காரர்களின் பட்டியல், சிறந்த இராணுவம் கொண்ட நாடுகள், வாழ்வதற்கு வேலை பார்ப்பதற்கு உகந்த சிறந்த நாடுகள், மிகப்பெரிய மத்திய வங்கிகள் கொண்ட நாடுகள் போன்ற பட்டியல்களை வெளியிட்டது. இதில் 'உலகின் பணக்கார நடிகர்கள்' பட்டியலை வெளியிட்டது 'world of statistics’. அப்பட்டியலில் இந்திய நடிகர் ஷாருக் கான், டுவைன் ஜான்சன், ஜாக்கி சான், ராபர்ட் டி நீரோ உள்ளிட்ட நடிகர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், ஜாக்கி சான், ராபர்ட் டி நீரோ போன்றோரை பின்னுக்கு தள்ளி டாலர் மதிப்பில் 770 மில்லியன் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் வகிக்கிறார் இந்திய நடிகர் ஷாருக் கான் அவர்கள். இதனையடுத்து இந்திய நடிகர்களில் ஷாருக் கான் ஒருவர் இடம்பெற்றிருப்பதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சியடைந்து அந்த பதிவை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் ஷாருக் கான் பல தாசப்தங்களாக நடிப்பு துறையில் உள்ளார். இந்தி திரைப்படங்களில் அறிமுகமானாலும் இந்தியாவில் பெரும்பாலான மொழி மக்களுக்கு பரிச்சையமானவர். கிட்டத்தட்ட 90 படங்களில் நடித்த ஷாருக் கான், வளர்ந்து வரும் காலம் முதல் இன்று வரை பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தனக்கென்ற ஒரு சாம்ராஜயத்தை உருவாக்கி பாலிவுட்டின் கிங் கானாக என்றும் திகழ்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் எதுவும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஷாருக் கான் தற்போது ‘பதான்’ படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.
தொடர் தோல்வி படங்களை சந்தித்த பாலிவுட் திரையுலகம் இந்த நிலையை மாற்றி ஷாருக் கான் படங்களே தற்போது பிளாக் பஸ்டர் படம் கொடுக்க முடியும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஷாருக் கான் குறித்த எந்தவொரு செய்தி வந்தாலும் இந்திய அளவில் டிரண்ட் செய்யப்பட்டு வருகிறது.