கடந்த 2018 ல் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பரியேரும் பெருமாள்’ அட்டகாசமான கதைக்களத்துடன் வாழ்வியலை பேசும் படமாக பரியேரும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபதிரங்களில் நடித்திருப்பார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி இந்த திரைப்படம் மூலம் இயக்குனர் மாரி செல்வராஜ் மீது தமிழ் சினிமா கவனம் செலுத்தியது.
அதன்படி அவரது இரண்டாவது திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுடன் அமைந்தது. அந்த கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.பின் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் கூட்டணி அமைத்து ‘மாமன்னன்’ திரைப்படத்தை முடித்துள்ளார் விரைவில் அந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தையும் சியான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் புது படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படங்களை முடித்து மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கிறார்.
முதல் படமான பரியேரும் பெருமாள் செய்த தாக்கம் தற்போது மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அத்தகைய பரியேரும் பெருமாள் திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் இப்படத்தைப் தயாரிகவுள்ளதாகவும் அதில் கதாநாயகனாக சித்தாந் சதுர் வேதி யும் கதாநாயகியாக திருப்திடிமிரி நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் படமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து தமிழ் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் மண் சார்ந்த வாழ்வியல் சார்ந்த கதையை எப்படி கையாள முடியும் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பல படங்களை ரீமேக் செய்வதாக சொல்லி பாழாக்கி வைத்திருப்பதாகவும் இவரிடம் இருந்து நல்ல படங்களை காப்பாற்றவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தற்போது இந்தியில் அதிகப்படியான தமிழ் திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. முன்னதாக காஞ்சனா, வீரம், கைதி போன்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடையே விமர்சனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.