பிக்பாஸ் ஆரியின் புதிய பட டைட்டில் இது தான்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
By Anand S | Galatta | February 12, 2022 16:15 PM IST
தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆரி மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை & மாயா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார் இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த ஆரி அர்ஜுனன் பிக்பாஸில் டைட்டில் வின்னராக வெற்றியும் பெற்றார்.
தொடர்ந்து கதாநாயகனாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் ஆரி நடிப்பில் அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்கள் தயாராகி விரைவில் வெளிவரவுள்ளது. முன்னதாக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரி.
இதனிடையே சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கினார் நடிகர் ஆரி. SAS புரொடக்ஷன்ஸ் சார்பில் தனது முதல் படமாக தயாரிப்பாளர் யோகராஜ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்க, நடிகை அஞ்சு குரியன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஈரோடு மகேஷ், மனோபாலா மற்றும் ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதிரடி ஆக்ஷன் படமாக இயக்குனர் மணி வர்மன் இயக்கத்தில் தயாராகும் இத்திரைப்படத்திற்கு K.G.ரதீஷ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீசாய் தேவ் இசையமைக்கிறார். பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் விவேக் பாடல்களை எழுத சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார். இந்நிலையில் இந்த புதிய படத்திற்கான டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்திற்கு TN-43 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் TN-43 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Title Look of My Next #TN43 ✨
— Aari Arujunan (@Aariarujunan) February 12, 2022
எதிர்பாராததை எதிர் பாருங்கள்! #AAA
A @ManiVarman23 directorial 🎬
Produced by #SASyogaraj@productions_sas
@AnjuKurian10 @kg_ratheesh @sanlokesh @musicofsai @Viveka_Lyrics @onlynikil @akash_tweetz pic.twitter.com/MJ8YRhXbn2