காலம் காலமாக தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாக இருந்து வருவது தொலைக்காட்சி தொடர்கள், ஒரு நெடுந்தொடர் வெற்றி பெற்றால் அந்த தொடரில் நடித்த நடிகர்கள் அந்த நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர் முதற்கொண்டு ரசிகர்கள் நினைவில் வைத்து கொண்டிருக்கின்றனர். ஆயிரமாயிரம் தொலைக்காட்சி தொடர்கள் இதுவரை வந்தாலும் அதில் மக்களை கவர்ந்த தொடர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் அந்த தொடரை நினைவில் வைத்து கொள்கின்றனர். அத்தகைய ரசிகர்களின் மனதை வென்று நீண்ட நெடுங்காலமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா. காதல் கதையில் தொடங்கி டி என் ஏ டெஸ்ட் வரை வாரம் வாரம் டிரெண்டிங்கில் இருந்து வந்தது. சீரியல் என்றால் குடும்ப பெண்மணிகள் என்று இருந்ததை மாற்றி இளைஞர்களும் இணையவாசிகளும் பார்க்கும் அளவு அந்த தொடர் வைரலானது குறிப்பிடத்தக்கது. அந்தளவு பேசப்பட்ட முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகி கொண்டிருக்கின்றது, முதல் சீசனுக்கு இணையாக இந்த சீசனுக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை அளித்து வருகின்றனர்.
புது வித கதைகளத்தில் ரசிகர்களை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை தூண்டும் அளவு எபிசோடுகளை கொடுத்து பாரதி கண்ணம்மா சீரியல் இதில் முதல் சீசனில் நடித்து பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் அந்த சீசனில் கதாநாயகி கண்ணம்மாவின் பாட்டியாக நடித்த நடிகை விஜயலட்சுமி. சீரியல் தொடக்கத்தில் கதாநாயாகி கண்ணம்மாவை கொடுமை படுத்தியே தமிழ் ரசிகர்களின் மனதில் எதிர்மறையான எண்ணத்துடன் பிரபலமான இவர் இடையே கதையில் அவருக்கான கரு இல்லாமல் போக தொடரிலிருந்து விலகினார் நடிகை விஜயலட்சுமி.
இவருக்கு சிறுநீரக கோளறு ஏற்பட்டதால் நடிப்பதில் இருந்து ஒய்வு பெற்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது 70 வது வயதில் தூக்கத்திலே உயிர் பிரிந்து மறைந்தார். இவரது மறைவு சின்னத்திரையில் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் சரவணன் மீனாட்சி போன்ற வெற்றி தொடர்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1976 ல் வெளியான ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்த இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோரின் படத்திலும் நடித்திருக்கிறார். இடையே வெள்ளிதிரையில் வாய்புகள் குறைய சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். அதன்படி அவர் 50 க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.