தமிழ் இணைய தொடரில் முற்போக்கு சிந்தனைகளையும் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளையும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த பல நல்ல எண்ணங்களையும் விதைக்கும் கதையை நேர்த்தியாக கையாண்டு அதை ரசிக்கும் படியான தரத்தில் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் ஜீ5 இணையதளத்தில் வெளியான தொடர் ‘அயலி’ இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்ஷத்ரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 8 எபிசோடுகளை கொண்டு வெளியான அயலி தொடர் கடந்த ஜனவரி 26 ம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து இன்றுவரை திரைத்துறையினரையும் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று ஜீ 5 தளத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அயலி. இதில் திரைக்கதை, நடிப்பு, கதையின் தரம், ஒளிப்பதிவு என அனைத்து பிரிவிலும் அசத்தியிருக்கும் அயலி தொடர் குறித்து அப்படத்தில் நடித்த நடிகர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர்.
இதில் அயலி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அபி நக்ஷ்த்ராவிடம் நடிப்பதில் சிரமம் ஏற்பட்ட காட்சி எது என்று கேட்கையில் .
அதற்கு அவர், "மாதவிடாய் வந்தபின் தண்ணீருகுள் இறங்கி உட்காரும் காட்சி எடுக்கும் போது எந்த தயக்கமும் இல்லை. என் மூலமா இந்த விஷயத்தை எல்லோருக்கும் புரிய வைக்க ஒரு வாய்ப்பாகதான் நான் அதை பார்த்தேன். அதனால் நான் அதை சந்தோஷமாகதான் பண்ணேன். பண்ணும் போது எந்த தயக்கமும் இல்லை. ஆனா தண்ணீரில் போய் உட்காரும் போது படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்த பின் அடுத்து புது துணி போட வேண்டும். அப்படி மாத்தும்போது என் சட்டைக்குள் ஒரு பூரான் ஓடிட்டு இருந்தது. முன்னாடி முழுக்க வண்டுகளாக இருந்தது.
அதன்பின் அதை பார்த்து எங்க அம்மா கத்திட்டாங்க.. அதன்பின் பூரான் கடிச்சிருக்கும் போல முதுகுல தழும்பா இருந்தது. மருத்துவமனைக்கு சென்று இரண்டு ஊசி போட்டாங்க.. நான் இதுவரை இரண்டு ஊசி போட்டதே இல்லை. அப்போதுதான் ரொம்ப கஷ்டமா இருந்தது." என்றார் அபி நக்ஷத்திரா.
மேலும் அயலி படக்குழுவினர் அயலி தொடர் குறித்து பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை நமது கலாட்ட மீடியாவில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..