உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மார்வல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் திரைப்படம் மூலம் பெருமளவு கவனம் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். டாம் குரூஸின் மிசன் இம்பாசிபல் நடித்து பரிச்சயமானவர் என்றாலும் பெரியளவு நட்சத்திர அந்தஸ்த்து பெற்றது மார்வல் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் மூலம் தான். தனது பெயரான ஜெர்மி ரென்னர் மக்களிடையே அவெஞ்சர்ஸ் ஹாக்காயாக மாறும் அளவு பிரபலமடைந்தவர் இவர்.  

சாலை இருளில் மூழ்குமளவு புத்தாண்டில் கடும் பனிபொழிவு அமேரிக்கா நேவோடா நகரில் ஏற்பட்டது குடியிருப்பு பகுதியில் இருந்த பனியை ஜெர்மி அகற்றும் போது விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஜெர்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரென்னரின் மார்பு பகுதியிலும், இன்னும் சில இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜெர்மி ரென்னர் ரசிகர்கள் அவர் உடல்நிலை விரைவில் குணமடைய தங்களின் பிராத்தனைகளை  தெரிவித்து வருகின்றனர். வலைதளங்களிலும் இதுகுறித்து பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் ஜெர்மி தனது சமூக வலைதளத்தில்,

“உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! நான்  தற்போது என்ன பதிவிட வேண்டும் என்பதில் குழப்பமாகவுள்ளேன். இருந்தும் எனது அன்பை உங்களுக்கு பகிர்கிறேன்” என்று மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் பதிவேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

A post shared by Jeremy Renner (@jeremyrenner)

மேலும் இந்த பதிவில் பிரபல நட்சத்திரங்கள் பலர் தங்கள் பிராத்தனைகளையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர். இதில் தோர் திரைப்பட புகழ் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் “விரைவில் குணமடைய வேண்டும் நண்பா. எனது அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றும் கேப்டன் அமெரிக்கா புகழ் கிரிஸ் எவன்ஸ் “வலிகளை எதிர்கொள்வதில் வலிமை மிக்கவாறாய் இருங்கள். லவ் யு நண்பா” என்றும் ஸ்டார் லார்ட் புகழ் கிரிஸ் பாட் தொடர் பிராத்தனைகளை உங்களுக்காக செய்து வருகிறேன் சகோதாரா” என்றும் பதிவிட்டுள்ளனர்.  ஜெர்மியின் பதிவும் சக நடிகர்களின் கமெண்ட்டுகளும் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.