தமிழ் திரையில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் முழுகவனம் செலுத்தி வெற்றிபெரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. இறுதியாக இவரது நடிப்பில் பூமராங் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Atharvas Hundred Movie Teaser Released By Makkal Selvan Vijay Sethupathi

டார்லிங் பட புகழ் இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் 100. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Atharvas Hundred Movie Teaser Released By Makkal Selvan Vijay Sethupathi

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தை காவியா வேணுகோபால் தயாரித்துள்ளார். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

Atharvas Hundred Movie Teaser Released By Makkal Selvan Vijay Sethupathi

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியானது. இதை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார்.