பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரைப்பிரபலங்களும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிகிறது. 

Arjun Kapoor Nostalgic Conversation With Sushant Singh Rajput

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதத்தில் சுஷாந்துடன் கடைசியாக பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில், 18 மாதங்களுக்கு முன்னால் கேதார்நாத் பட ரிலீஸின் போது சுஷாந்த் தனது அம்மாவை பற்றி பதிவு ஒன்றை எழுதியிருந்தார். இதுகுறித்து அவரிடம் கடைசியாக பேசியிருந்தேன். அவரது படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் போது அதனை காண அவரது தாயார் இல்லை என்று அவர் வருத்தப்பட்டிருக்கலாம். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது, எந்த விஷயம் அவரை இப்படி ஒரு முடிவை எடுக்கச் செய்தது என்னால் சொல்ல முடியாது. 

Arjun Kapoor Nostalgic Conversation With Sushant Singh Rajput

அவரது தாயார் இல்லாத வெற்றிடம் பற்றிய அவரது வருத்தத்தை என்னால் உணர முடிந்தது. மேலும் உங்கள் அமைதியை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள் என்று உருக்கமாக பதிவை செய்துள்ளார். சுஷாந்துடன் நடித்த பல திரைப்பிரபலங்கள் அவர் குறித்து பதிவு செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

18 months ago... My last msg to him was when he posted about his mom a week after the release of Kedarnath. He was missing her I assume while the movie was being celebrated. I didn’t know him well enough though our paths crossed at yrf, events & screenings every now & then. I can’t say I understood what made him make this choice. I can say I felt the pain he did about losing his bearings & feeling that void of his mother. I hope ur in a better & happier space my friend. I hope u have found ur peace. We will all wonder & try & make sense of what happened today. I just hope & pray that when the circus settles down we as a society in due course realise ur choice wasn’t driven by one singular moment or thing but a culmination of so much that defines a human being not just by the profession u were in. Rest my dear brother Sushant you are now I hope at peace.

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on