ஜி.வி.பிரகாஷ் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்ட ட்வீட் !
By Sakthi Priyan | Galatta | October 27, 2018 11:16 AM IST
இளைஞர்களின் சென்சேஷன் என கூறப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இதுகுறித்து ஆஸ்கார் விருது வின்னரான ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தி பற்றி விவரித்து பதிவிட்டிருக்கிறார்.
Fans in Japan, Sarvam Thala Mayam is being screened at the Tokyo Film Festival Catch it at TOHO Cinemas Roppongi Hills on Oct 28th at 18:15 and on Oct 30th at 20:25
— A.R.Rahman (@arrahman) October 26, 2018
Enjoy the story of Peter and his journey into the world of classical music.#sarvamthalamayam
மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தின் பாடல் வரிகள் தான் என்ற செய்தியை மணமுறுகி ராஜிவ் மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Remembering the legendary Na. Muthukumar on his birth anniversary. Team #SarvamThaalaMayam has the good fortune of having the last song penned by him in the music album. Eternal lyrics & mortal writers. Rest in peace.
— Rajiv Menon (@DirRajivMenon) July 12, 2018
பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ் அவர்களுடன் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார். இதற்க்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் இந்த லைவ்-சின்க் ரெகார்டிங் முறை பயன்படுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்.