"ARரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி சர்ச்சை"- இசைப்புயலுக்கு ஆதரவாக வந்து நின்ற முன்னணி நட்சத்திரங்கள்! விவரம் உள்ளே

இசை கச்சேரி சர்ச்சையில் ARரஹ்மானுக்கு ஆதரவாக வந்த நட்சத்திரங்கள்,Ar rahman marakkuma nenjam concert controversy | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக விளங்கும் இசைப்புயல் AR.ரஹ்மான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சரியான டிக்கெட்டுகள் எடுத்த இசை புயலின் ரசிகர்கள் பலரும் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். டிக்கட்டுகள் விற்கப்பட்டதில் சில குளறுபடிகள் இருந்ததாலும் சரியான முறையில் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாததாலும் ரசிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். விழா முடிந்ததும் இதுகுறித்து அறிந்த இசைப்புயல் AR.ரகுமான் இது குறித்து அனைவரிடமும் வருத்தம் தெரிவித்ததோடு இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். விழாவை நடத்திய ACTC நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இருப்பினும் இது முழுக்க முழுக்க இசை புயல் AR.ரகுமான் அவர்களின் தவறு என்று குறிப்பிட்டு இசை புயல் AR.ரகுமான் மீது மிகுந்த வன்மத்தோடு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து இசைப்புயல் AR.ரகுமான் அவர்களுக்கு ஆதரவாக ரசிகர்களும் பிரபலங்களும் தற்போது முன்வந்துள்ளனர். அந்த வகையில்

இது குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆதரவாக வந்து நின்ற யுவன் சங்கர் ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்துவது என்பது போக்குவரத்து வேளாண்மை செய்வது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது என பலவிதமான விஷயங்களை உள்ளடக்கிய கடினமான செயலாகும். அதிகப்படியான கூட்டம் வரும் போதும் தவிர்க்க முடியாத சில பிரச்சனைகள் வரும் போதும் இது மாதிரியான தவறுகள் மிகப்பெரிய கச்சேரிகளை நடத்தும் போதும் ஏற்படத்தான் செய்கின்றன. சிறந்த நோக்கத்துடன் செய்த விஷயங்கள் கூட மோசமாக மாற்றக்கூடிய இந்த நபர்களால் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய மன உளைச்சல் ஏற்படுகிறது." எனக் குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

pic.twitter.com/Q1lMTTW0eE

— Raja yuvan (@thisisysr) September 11, 2023

அதேபோல் ஆதரவு குரல் கொடுத்த நடிகர் கார்த்தி அவர்கள், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரகுமான் சாரை நமக்குத் தெரியும் மிகவும் பிடிக்கும். இசைக் கச்சேரியில் நடந்த இந்த தவறு எதிர்பார்க்காமல் நடந்தது. எனது குடும்பமும் இந்த இசைக் கச்சேரியில் தான் இருந்தார்கள். ஆனால் நான் AR.ரகுமான் சாருடன் நிற்கிறேன். மேலும் விழாவை நடத்தியவர்கள் இதற்கு பொறுப்பேற்பார்கள் என நம்புகிறேன். ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் வெறுப்பை தாண்டி ஒரு அன்பை ரகுமான் சார் வைப்பது போலவே நாமும் அவர் மீது அன்பு காட்டுவோம்.” என பதிவிட்டு இருக்கிறார்.

We have known and loved Rahman sir for more than 3 decades now... What happened during the concert was unfortunate. However, knowing sir he would be immensely affected by it. My family too was at the concert amid the chaos but I stay with #ARRahman sir and I hope the event…

— Karthi (@Karthi_Offl) September 12, 2023

மேலும் மாநாடு படத்தின் தயாரிப்பாளரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சுரேஷ் காமாட்சி அவர்கள், “இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான். எப்போதும் தன் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர் இந்த முறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பி விட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏ. ஆர் ரகுமானும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இருந்தும் சிலர் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்கத் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆஸ்கார் விருது விழா மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய மாபெரும் கலைஞனை இவ்வொரு நிகழ்வை வைத்து அசிங்கப்படுத்துவது மிக மிகத் தவறான செயல். இத்தனை வருட சாதனைகளை ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் இழந்துவிட்டதாகப் பேசுவது சரியானதல்ல. நிகழ்விற்குப் பொறுப்பேற்று சீர்செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளபோது மலிவான அரசியல் செய்யும் சிலரின் சந்தர்ப்பவாத பேச்சுக்கு நாமும் ஒத்து ஊதுவது கேவலமான நாகரீகமற்ற செயல். அவரது சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும். 2016 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வழங்கினார். 2018 இல் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட போது இசை நிகழ்ச்சி நடத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் நிறைய குடும்பங்களுக்கு உதவியுள்ளார். லைட் மேன் யூனியனுக்கு இசைநிகழ்ச்சி நடத்தித் தந்துள்ளார். ஒற்றை நிகழ்வால் சர்வதேச புகழ் கொண்ட ஒரு நாயகனை ஸ்கேமர் என அழைப்பது சரியான செயலா என சிந்தியுங்கள். நிகழ்ந்த தவறுகளை சரிசெய்ய நேரம் கொடுங்கள். அவராகவே முன்வந்து சரிசெய்யக்கூடியவர்தான். நம்மில் ஒருவரை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நேரம் இது. வன்மம் பிடித்தவர்களின் நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம். மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. அதேபோல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று மக்களின் பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டு தனது ஆதரவை பதிவிட்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான்.

எப்போதும் தன் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர் இந்த முறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பி விட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.… pic.twitter.com/5AEvt5nCR8

— sureshkamatchi (@sureshkamatchi) September 12, 2023

தொடர்ந்து தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தனது ஆதரவை, “வெள்ளைப்பூக்கள் மலரட்டுமே - மிக எளிதாக அடைவதை மிகக்கடினமாக அடைய நேருவது ஒரு சிலருக்கல்ல எனக்கும் மிகப் பொருந்தும் கயிரில் நடப்பவன் சேமிக்க அந்தர ரணங்களின் வழியே விளையும் பருக்கைகளை ஒரு குருவிக்கு சிறு செயல் பூர்த்தியாகத் தருகிறது. பல வருடங்கள் தேக்கித்தான் ஊரெல்லாம் சொற்களின் ஆறு கவிதைகள் கொட்டி ஓடட்டும் என்றே மலையின் முகட்டில் இசைத்தேன். வஞ்சகம் விரைந்து வரும் அளவுக்கு நன்மைக்கு எப்போதும் வழிநீண்ட வனத்தாமதம்.. மனித நகரம்…  நகர மனிதம்… கவனம் ஈர்க்கும் இசையின் காலமே வாழ்க” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

@arrahman @arrameen pic.twitter.com/C17HjNuhvK

— Seenu Ramasamy (@seenuramasamy) September 12, 2023

மேலும் நடிகை குஷ்பூ, பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி உள்ளிட்ட பலரும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இந்த கடுமையான சூழ்நிலையில் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
 

Heard about the major chaos and difficulties faced by #ARR fans at the chennai concert. Rahman has always made sure his fans are never disappointed. My daughter and her friends were among those who were denied entry despite a Diamond pass. It took them over 3 hours to reach the…

— KhushbuSundar (@khushsundar) September 12, 2023

I think the police have started investigating on what happened at ARR concert..and AR Rahman has himself asked audience who missed the show to send their details and the company will look into it.kindly put an end to this and stop making it political 🙏 #ARRahman pic.twitter.com/WxEIuL9z0L

— Santhosh Dhayanithi (@DhayaSandy) September 12, 2023

https://t.co/yP4RHJqf0S pic.twitter.com/xQl7y38Sgo

— Shweta Mohan (@_ShwetaMohan_) September 12, 2023